உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

23

நச்சினார்க்கினியர் சுட்டுகின்றார். "முரணிய புறத்தோன் அணங்கிய பக்கம்” (தொல். புறத். 12.) என்பதற்குக் “கலையெனப் பாய்ந்தமாவும் என்னும் தகடூர் யாத்திரைப் பாடலை மேற்கோள் காட்டி, “இது சேரமான், பொன்முடியாரையும் அரிசில் கிழாரையும் நோக்கித் தன்படைபட்ட தன்மை கூறக் கேட்டோற்கு அவர் கூறியது" எனக் குறிக்கிறார். தனால் அவ்விருவரும் உடன் இருந்து உடன் பாடியமை உறுதியாம்.

அரிசில் கிழார்

ன்

அரிசில்கிழார், பேகனால் துறக்கப்பட்ட கண்ணகி காரணமாக அவனைப் பாடிய புலவர்களுள் ஒருவர் (புறம். 146.) அவருடன் அவள் காரணமாகவோ பேகனைக் கபிலரும் (புறம். 143) பரணரும் (புறம். 144-5) பெருங்குன்றூர்கிழாரும் (புறம். 147) பாடிய பாடல்கள் உண்மையால் இவர்கள் அனைவரும் உடன் காலத்தவர் என்பதை உணரலாம். இவருள் பரணர் பதிற்றுப் பத்துள் ஐந்தாம் பத்தையும், கபிலர் ஏழாம்பத்தையும், அரிசில் கிழார் எட்டாம் பத்தையும், பெருங்குன்றூர்க்கிழார் ஒன்பதாம் பத்தையும் பாடினர் என்பதும் இவண் அறியத்தக்கது.

18

அ ரிசில்கிழார் பாடியனவாக அறியப்பெறுவன பாடல்கள். ல்கள். இவற்றுள் 17 பாடல்கள் புறத்துறைப் பாடல்கள் (பதிற்றுப் பத்துள் எட்டாம் பத்து: 10 பாடல்கள்; புறநானூறு: 146, 230, 281, 285, 300, 304, 342 ஆக 7 பாடல்கள். அகத்துறைப் பாடல் குறுந்தொகை 193 ஆம் பாடல் ஒன்றுமே. அவர் பாடிய புறத்துறைகள் முறையே குறுங்கலி, கையறுநிலை, பேய்க் காஞ்சி என்பவை. இவற்றுள் பல தகடூர் யாத்திரைப் பாடல்களை நிகரனவாக இருத்தலை உரைவிளக்கத்தில் கண்டு கொள்க.

பொன்முடியார்.

சங்கச் சான்றோர் வரிசையுள் நல்லியற் புலமை மெல்லியலாருள் பொன்முடியாரும் ஒருவர். அவர் பாடிய “ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே” என்னும் புறப்பாடல் (312) நாடறிந்த புகழ் வாய்ந்தது. இப் பாடலையன்றி, அவர் பாடிய பாடல்களாக இரண்டு கிடைத்துள்ளன. அவை புறநானூற்றில் (299, 310) இடம் பெற்றுள்ளன. முன்னது 'குதிரை மறம்' என்னும் துறையையும், பின்னது ‘நூழிலாட்டு' என்னும் துறையையும் சேர்ந்தவை.

·