உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இளங்குமரனார் தமிழ்வளம்

12

அவையடக்கமும் கடவுள் வாழ்த்தும்.

“வியத்தக்க காணுங்கால்” என்னும் தகடூர் யாத்திரைப் பாடலை அவையடக்கம் என்னும் தலைப்பில் வழங்கியுள்ளார். அவையடக்கம் சங்கச் சான்றோர் நூல்களில் அமைந்தது இல்லை. பிற்காலச் சான்றோர்களின் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலும் அமைந்தது இல்லை. சிந்தாமணி, குண்டகேசி, வளையாபதி இராமாயணம் முதலாய இலக்கியங்களிலும், யாப்பருங்கலக் காரிகை, வீரசோழியம், வெண்பாப் பாட்டியல் முதலாய இலக்கணங்களிலும் உண்டு. சங்கச் சான்றோர் நூலாகிய தகடூர் யாத்திரையில் அவையடக்கப் க்கப் பாடல் அமைந்திருப்பது வேறுபடக் கருதத் தோன்றும், ஆனால் நாம் முன்னே யுரைத்தவாறு உரை இடையிட்டு அமைத்த காலத்தே அமைக்கப் பெற்றிருக்க வேண்டும். தொகை நூல்களுக்குக் கடவுள் வாழ்த்து, பின்னே பாடிச் சேர்க்கப் பெற்றது என்பதை அறிவோர் இக் கருத்தில் ஐயுறார்.

யாப்பருங்கலமும், யாப்பருங்கலக் காரிகையும் அமிதசாகரர் எனப்பெறும் ஓராசிரியரால் இயற்றப் பெற்றனவே. இவற்றுள் முற்படச் செய்யப் பெற்றது யாப்பருங்கலம்; பிற்படச் செய்யப் பெற்றது யாப்பருங்கலக் காரிகை; முன்னதில் அவையடக்கம் ல்லை; பின்னதில் அவையடக்கம் அ உண்டு. ஆதலால் இலக்கியங்களில் சிந்தாமணியும், இலக்கணங்களில் யாப்பருங்கலக் காரிகையுமே முதன்முதல் அவையடக்கம் பெற்ற நூல் எனலாம். அக் காலத்திற்குப் பின்னரே தகடூர் யாத்திரை அவையடக்கத் துடன் உலாவந்திருக்க வேண்டும். அவ்வுலா, புறத்திரட்டுத் தொகுப்பாசிரியர்க்கு முற்பட்டே நிகழ்ந்திருக்க வேண்டும்.

இனிக் கடவுள் வாழ்த்துப் பற்றியும் எண்ண வேண்டியுள்ளது. தகடூர் யாத்திரையில் கடவுள் வாழ்த்து உண்டு என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், தகடூர் யாத்திரைக் கடவுள் வாழ்த்தாக இஃது இருக்கக் கூடும் என்னும் ஐயுற வொன்றுளது.

பதிற்றுப்பத்தின் முதற்பத்துக் கிட்டாமையால் அதன் கடவுள் வாழ்த்து இன்னதென அறியக் கூடவில்லை. ஆதலால் முதற்கண் அதனை வெளியிட்ட ஐயரவர்கள் கடவுள் வாழ்த்தென எதனையும் பதிப்பிடவில்லை. பின்னர் உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் உரைவிளக்கம் கண்டு பதிப்பித்த பதிற்றுப்பத்தில் "எரியெள்ளு வன்ன" என்னும் பாடலைக்