உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

66

25

கடவுள் வாழ்த்தாக இணைத்து உரைவிளக்கம் வரைந்துள்ளனர். அதன்கண், இப்பாட்டுப் பதிற்றுப்பத்தென வெளியாகி யிருக்கும் தொகை நூலில் காணப்பட்டிலது; ஆயினும், புறத்திணையுரையில் நச்சினார்க்கினியரால் கடவுள் வாழ்த்துக்கு எடுத்துக் காட்டப்படும் இப் பாட்டு பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்துப்பாட்டாக இருக்கலாம் என அறிஞர் பலரும் கருதுகின்றனர். ஆதலின் ஈண்டுக் கடவுள் வாழ்த்தாகக் கொண்டு உரை கூறப்பட்டது. மேலும், ஏனைத் தொகை நூல் பல வற்றிற்குக் கடவுள் வாழ்த்துப் பாடிச் சேர்த்தவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். ஆதலால் இப் பாட்டும் அவர் பாடியதாக இருக்கலாம் எனப் பலரும் எண்ணுகின்றனர். இதனைப் பாடியவர் பதிற்றுப்பத்து ஆசிரியருள் ஒருவராதலுங் கூடும் என எழுதினர்.

6

பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்கள், “பதிற்றுப் பத்து என்ற தொகை நூலிற்குரிய கடவுள் வாழ்த்துச் செய்யுளே நமக்கு அகப்படவில்லை. இச் செய்யுள் இதுவரையில் அகப் படாத முதற்பத்துடன் மறைந்துவிட்டது போலும்." என்றும், ‘எரியெள்ளுவன்ன. என்பது பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்தாக இருத்தல் கூடுமோ? அங்ஙனமாயின் அகவலோசை பிழை படாதா?' என்றும் எழுதினர் (இலக்கிய தீபம். 124.)

66

‘அவர்கள் அகவலோசை பிழைபடாதா?' என்று எழுப்பிய ஐயம் முறையானதே. பிழைபடவே செய்யும் எனத் துணியலாம்.

(1) நூல் எவ்வகை யாப்பால் அமைந்திருக்கிறதோ அவ் வகை யாப்பால் கடவுள் வாழ்த்துப் பாடுதல் பெருந்தேவனார் காள்கை என்பதை அவர் பாடிய கடவுள் வாழ்த்துகளால் அறியலாம். குறுந்தொகை, ஐங்குறுநூறு, நற்றிணை, அக நானூறு, புறநானூறு என்பவை அகவல் பாவால் அமைந்தவை. ஆகவே, அகவலாலேயே கடவுள் வாழ்த்து இயற்றினார் பெருந் தேவனார். அவ்வகையில் பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்துப் பொருந்தி யமையவில்லை.

66

(2) "எரியெள்ளு வன்ன" என்னும் பாடலை “அமரர்கண் முடியும்” என்னும் நூற்பாவிற் காட்டிய (தொல். புறத். 26.) நச்சினார்க்கினியர், இது து க கடவுள் வாழ்த்து. தொகை களிலும் கீழ்க் கணக்கிலும் உள்ள கடவுள் வாழ்த்தெல்லாம் இதன்கண் அடக்குக” என்றார். ஆகலின், இது தொகைகளிலும், கீழ்க்கணக்கிலும் இடம்பெற்ற கடவுள் வாழ்த்து அன்று என்பது தெளிவாக விளங்கும்.