உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்குமரனார் தமிழ்வளம்

12

26

(3) எரியெள்

வன்ன என்பது மருட்பாவாகும்.

வரும்

"செப்பல் முன்னாகவும் அகவல் பின்னாகவும் இலக்கணத்தது மருட்பா. ஆனால் இம் மருட்பாவோ, வெண்பா அடியாவனவும், அகவலடியாவனவும் வெண்டளை பிழையாமல் வந்தனவாம். இவ்வகை மருட்பாவால் அமைந்த பாடல்கள் தகடூர் யாத்திரைக் கண்ணேயே உள (1,9)

6

(4) அவ்வந் நூலின் பொருட்சிறப்பு இயைபுக்கு ஏற்ப முதற் சொல் எடுத்துப் பாடுதல் கடவுள் வாழ்த்துகளில் காணக் கிடப்பது.எடுத்துக்காட்டாக அகநானூற்றுக் கடவுள் வாழ்த்தையும் புறநானூற்றுக் கடவுள் வாழ்த்தையும் கருதுக. இரண்டும் சிவபெருமானைப் பற்றியன; கொன்றை மாலையையும் பற்றியன. ஆனால் புறப்பாடலுக்குக் 'கண்ணி' சிறப்புடைமையால் அதனைத் தலைச்சொல்லாகக் கொண்டு “கண்ணி கார்நறுங் கொன்றை” என்றார். அகப்பாடலுக்குக் ‘காலம்’ சிறப்புடைமையால் 'கார் நறுங் கொன்றை' என்றார். இவ்வகையில் சேரர் குடிவழி முதன்மையாகக் கூறப்பெறும். 2‘எரி'யைத் தொடக்கமாகக் கொண்டு இப் பாடல் இயற்றப் பெற்றதாகலாம். பதிற்றுப் பத்துப்போலவே தகடூர் யாத்திரையும் சேரர்க்குரிமை பூண்டது ஆகலானும், அந் நூலில் வரப்பெறாத மருட்பா தகடூர் யாத்திரைக் கண்ணே அமைந்திருத்தலாலும் அதற்குரியதாகக் கொள்ளுதலே பொருத்தமுடைத்தாம் என்க.

பதிப்பும் உரையும்

தகடூர் யாத்திரைப் பாடல்கள் இடம்பெற்றுள்ள நூல்களை யெல்லாம் ஒப்புநோக்கி இந்நூல் பதிக்கப் பெற்றதாகும். பாட வேறுபாடுகளாக அறியப்பெற்றவை ஆங்காங்குக் குறிக்கப் பெற்றுள்ளன. புறத்திரட்டில்.

“நகையுள்ளு நல்லவை யெய்தார் பகைநலிய

வேற்றுக் களத்தி லொருவர்த மாறாகச் சென்றா லொருவர் மேற்...

புண்ணும் படுக்கலான் தான்படான் போந்தாரக்

கண்ணும் படுங்கொல் கவன்று”

தகடூர். 20.

என்று சிதைவோடு உள்ள பாடல், அதன் பொருளமைதி கருதி,

1. தொல். செய். 85 பேரா.

2. சோழர் குடிக்கு ஞாயிற்றையும், பாண்டியர் குடிக்குத் திங்களையும் சேரர் குடிக்கு எரியையும் வழிமுதலாகக் கூறுதல் வழக்கு.