உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

"நகையுள்ளும் நல்லவை எய்தார் ; பகைநலிய (ஞாட்புள்ளும் நல்லவை எய்தார் ; விழைவொடு) வேற்றுக் களத்தில் ஒருவர் தமராகச்

சென்றார் ஒருவர்மேற் (செம்மாந் தடர்த்தாற்றிப்) புண்ணும் படுக்கலார்; தாம்படார் ; போந்தாரக்

கண்ணும் படுங்கொல் கவன்று

27

எனப் பாடம் அமைத்துக்கொண்டதுடன், பாட துடன், பாட வேறுபாடும் ஆங்குக் காட்டப்பெற்றுள்ளது.

இதன் 32 ஆம் பாடல்,

“அஞ்சுதக் கனளே அஞ்சுதக் கனளே ‘யறுகா வலா' பந்த ரென்ன

வறுந்தலை முதியாள் அஞ்சுதக் கனளே’

என வருகின்றது. இதிலே ‘யறுகா வலா' என்பது சிதைவு என்பது வளிப்படை. இது ‘பயறு காவலர்’ எனத் திருத்திப் புறத் திரட்டில் பதிப்பிக்கப்பெற்றது. அப் பதிப்பு இந்நூலிலும் மேற்கொள்ளப் பெற்றுள்ளது. மற்றைப் பாட வேறுபாடுகள் ஆங்காங்குக் காட்டப்பெற்றுள.

இந்நூலில், ஒவ்வொரு பாடலுக்கும் உரிய தலைப்பை முதற்கண் வைத்து, அத் தலைப்புக்கு விளக்கம், தந்து அப்பாடல் இன்ன பாவகையைச் சார்ந்தது என்பதைக் குறித்து, அதன் பின்னே பாடல் காட்டப்பெற்றுளது. அப் பாடல் எந் நூல் வழியாகக் கிடைத்தது என்பதைக் காட்டி, 'இதன் பொருள்' என்னும் தலைப்பில் பொழிப்புரையும், 'இதனால் கூறியது' என்னும் தலைப்பில் பாடல் முழுமை தழுவிய கருத்துரையும் வழங்கப்பெற்றுள. இவற்றின் பின்னே விளக்கவுரையும் மேற் கோளாட்சியும், யாப்பமைதியும் தரப்பெற்றுள. விளக்கவுரையுள் ஒப்புமை சுட்டுதலும் சொல் விளக்கம் செய்தலும், பொருட் பொருத்தம் உரைத்தலும் விரிவாக மேற்கொள்ளப் பெற்றுள. விரிப்பிற் பெருகுமாதலின் ஆங்காங்குக் கண்டு கொள்க.

இந் நூலால் அறியப்பெறும் செய்திகள்

வியக்கத்தக்கது அல்லாததையும் கூறுபவர் மகிழ்ச்சியைக் கருதி அறிவிலார் போலச் சான்றோரும் வியத்தல் (அவை யடக்கம்) நீத்தார் பெருமையுணர்ந்து அவரைப் போற்றி ஒழுகுதல் (1) ஈகையின் பெருமை (2), செங்கோலின் சிறப்பு