உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இளங்குமரனார் தமிழ்வளம்

12

(3) அரசகுடியின் பிறத்தலின் அல்லல் (4), சொல்லத்தக்க சொல்லின் தன்மை (5), உடன்பிறந்தாரிடைக் கொள்ளத்தக்க உறவு (6,7) பகைவர் தீண்டற்காகா அரண் வலிமை, (8), நாடு எவ்வெவ் வகையால் சிறக்கவேண்டும் என நல்லோர் வாழ்த்தும் வகை (9), அறிவாளர் கூட்டத்தில் அறிவிலார் நடந்துகொள்ளும் நகைதகுசெயல் (10), வேந்தன் ஏவிய அளவில் விரிச்சி கேளாமலும் வீணாகக் கோடற்குச் செல்லுதல் (11), தம்மவரை இருட்பொழுதினும் ஆக்கள் அறிந்துகொண்டு அன்பு சொரிதல் (12), போருக்குச் செல்லுமுன் வீரர் போற்றிச் செய்யும் கொடைப்பெருக்கம் (13), கலங்கல் தந்த காவலனுக்குக் களப்போரில் தம் உயிர்தர வீரர் முந்துதல் (14), படைக்கலம் துளைத்த புண்ணோனைப் பாசறைக் கண் பஞ்சு பொதிந்து வைத்துத் துயராற்றுதல் (15), களிற்றின் முகத்தே கைவேலை விடுத்து வருதலின் இழிவு (16), இரப்பவரின் இன்மை ம கண்டும் இரங்காத புன்மை (17), அரசன் தலையளி பெற்றோர் ஆற்றத்தக்க கடமை (18), வேந்தன் மகிழக் கடமை புரிவார்க்கு உண்டாம் விருப்பம் (19), அத்தன்மை இல்லார்க்கு வரும் இழிவு (20), வேந்தர் பாராட்டும் சிறப்பு வீரமேம்பாட்டாலேயே உண்டாதல் (21), மூத்தார் ளையார் இவர் என வீரவகையால் பகுத்தல் (22), தன்மானமிக்க வீரனாவான் தன் ஆண்மையைப் பிறர் குறிப்பு வகையால் குறைத்து மதிப்பதையும் தாங்காமை (23), ஒருகை விலங்காம் யானையை வெல்லுதல் இருகை வீரர்க்கு இழுக்கு என வீரர் கருதுதல் (24), தன்னொத்த வீரனுக்குப் பெருமை தாராத போரை வீரனொருவன் செய்யாமை (25), சீரியவீரர் அரண்காவல் கொள்வதால் மக்கள் அச்சம் நீங்கி அகமகிழ்தல் (26), தன் முன்னோனைக் தான் கொல்லாமல் பின்னோன் அமையாமை (27), பகைப் படையைக் கண்ணோட்டம் விட்டு அளந்து, அதன் பெருமை கண்ட வீரர் தாமும் மகிழ்தல், (28) வேல்கொண்டு யானையை வீழ்த்தும் போரையே வீரர் பெரிதும் விரும்புதல் (29, 31, 34, 35) புண்பட்ட களிற்றின் படுகுரல் கேட்டுப் பாசறைக் கண் இருக்கும் வேந்தன் கண்ணுறக்கம் கொள்ளாது கவல்தல் (30), இறந்த வீரரின் உரிமை மகளிர் கைம்மைகொண்டு அறுத்த கூந்தலை ண்டியில் ஏற்றிச் செல்லுதல் (31), போர்க்களத்தில் இறந்துபடின் அவன் தாய் குளம்பொலிவுறக் குளித்தல் (36), துடியன்கொட்டும் பறை ஒலிக்கு ஏற்றவண்ணம், வெற்றி கொண்ட வீரன் ஏவும் குதிரையின் குளம்பு தாளமிட்டுச் செல்லுதல் (37), போரில் வீரன் வெட்டுண்டு இறப்பதையே மறக்குடிப் பெண் தருமமாகவும் தானமாகவும் கருதுதல் (38), தன்

கொன்றோனைத்