உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

29

கணவன் களத்தில் மடியின் மறக்குடிப்பெண் தன் உயிர் கொண்டு அவனுயிர் தேடிச்செல்ல விரைதல் (39), தன் குடிக்குப் பெருமை தாராத செயலைச் செய்யின் அவனை ஈன்ற வயிற்றை அறுக்க மறக்குடிப்பெண் துணிதல் (40), களத்தில் மடிந்து சிதைந்து கிடக்கும் மைந்தனைக் கண்டுபிடிக்க மாட்டாளாய் மூதின்மகள் தேடுதல் (41), புரவலன் மாய்ந்தகாலையில் முரசு முழங்குவதையும் வீரர் வெறுத்தல் (42), இணையிலா வீரன் விழுப்புண்பட்டு வீழ்ந்த இடத்தில் நின்று மாலையணிந்து கொண்டு போர்க்குப் புறப்படுதல் தமக்கு வெற்றி தருமென வீரர் கருதுதல் (43), பகைவனே எனினும் பண்பட்ட வீரனாக விளங்கு பவனைப் பலரும் பாராட்டுதல் (44), மதிற்கண் அமைந்த பொறி வகைகள் (45), காவற்காட்டைக் கடந்து அரணுள் புகுந்து ஊர்கொள்ளும் பொழுதை முன்னரே திட்டமிட்டு, திட்ட மிட்டவாறே கொள்ளுதல் (46), தீக்கனவு பின்னேவரும் தீமையை முன்னறிவிக்கும் குறியென நம்புதல் (47), ஆகிய இன்னவும் பிறவும் இத் தகடூர் யாத்திரையால் விளக்கமாக அறிந்துகொள்ளலாம்.

நீத்தார் பெருமை, ஈகை, செங்கோன்மை, சொல்வன்மை, தூது, நாடு, புல்லறிவாண்மை, நிரைகோடல், நிரைமீட்சி, பகை வயிற் சேறல், பாசறை, வஞ்சினம், படைச்செருக்கு, எயில் காத்தல், தானைமறம், மூதில்மறம், குதிரைமறம், இரங்கல் என்னும் பொருள் வகையில் புறத்திரட்டில் அமைந்தவாறே இத் தொகை நூல் அமைந்துள்ளது. இறுதியில் உள்ள நான்கு பாடல்களும் உரையாசிரியர்கள் மேற்கோள் காட்டியுள்ள துறைப் பெயர்களால் காட்டப்பெற்றன.

இதிலமைந்துள்ள சீரிய உவமைகளும், வேறு நூல்களில் காணக்கிடைக்காத சிறப்பான செய்திகளும் பலப்பல. இவர், ‘ஒருகுடர்ப் படுதர ஓரிரை துற்றும்

66

இருதலைப் புள்ளின் ஓருயிர் போல'

என்று கூறும் உவமை, உடன்பிறப்பாளர் உரிமை உறவுக்கு இணையற்ற சான்றாம். இது 'கவைமகனார்' என்னும் சங்கச் சான்றோர் பெயர்ப்பொருளையும் (குறுந். 324) 'ஓருயிர்ப் புள்ளின் இருதலை' என்னும் மதுரை மருதனிள நாகனார் வாக்கையும் (கலி. 89.) நன்கு விளக்குதல் அறிக.

‘கைவேல் களிற்றொடு போக்கி' வருபவனைத் திருவள்ளுவர் குறிப்பார்; கைவேலைக் களிற்றொடு போக்கி, அதனைப்