உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இளங்குமரனார் தமிழ்வளம் 12

பறிக்காது விட்டு வருதல் மறக்குடிக்கு மாபெரும் இழுக்காம் என்பதை இரண்டு டங்களில் குறிக்கிறது தகடூர் யாத்திரை.

"யானையின் மத்தகத்தில் எறிந்த வேலை விடியும் அளவுக்குள் யான் பறித்துக் கொண்டு வாரேன் எனில், என் தங்கை மணம் பூண்ட இல்லத்துச் சென்று அவள் கையை எதிர் பார்த்து வாழும் இழிநிலை யான் பெறுவேனாக" என வீரன் ஒருவன் வஞ்சினம் கூறுவதும் (16),

“புகர்முகக் குஞ்சரம் எறிந்த எஃகம் அதன்முகத் தொழிய நீபோந்தனையே எம்மில் செய்யா அரும்பழி செய்த கல்லாக் காளை

நின்னை ஈன்ற வயிற்றை வாதுவல் (அறுப்பேன்) என மூதின் மகள் கூறுவதும் (40) பிறநூல்களில் காண்டற்கரிய செய்தியாம்.

66

என்று

எற்கண் டறிகோ! எற்கண் டறிகோ !

என்மகனாதல் எற்கண் டறிகோ!”

ஒரு தாய் போர்க்களத்தில்

சிதைந்து கிடக்கும்

பிணக்குவையின் ஊடே தன் மைந்தனைத் தேடித்தேடி அலமரும் காட்சி (41) தகடூர் யாத்திரைக்குத் தன்னிகரற்ற பெருமை சேர்ப்பதாம்.

66

குதிரைமேலேறி வரும் வீரனே! வருக! வருக!”

66

66

அவனை எவரும் தடாதேயுங்கள்; தடாதேயுங்கள் !’

“இருகை மாக்கள் எவரே ஆயினும் அவர்க்கு நான் அஞ்சேன்”

66

"நான்கு கைகளையுடைய மாக்களை நாட்டில் எங்கும் கண்டிலேன் “அவன் என் தலையைக் கொய்தல் குறித்தே வருகின்றான்;”

“யானும் அவனைக் கொல்லுதல் குறித்தே போகின்றேன்”

66

ஆகையால் என்னைக் கொன்று போதலும் அவனுக்கு அரிதே!” “அவ்வாறே அவனைக் கொன்று வருதலும் எனக்கு அரிதே!”

“வெற்றி என்னைச் சேர்ந்த தானாலும் ஆகட்டும்

“அன்றி அவனைச் சேர்ந்த தானாலும் ஆகட்டும்” “எவ்வாறு ஆனாலும் ஆவதாக!”

“ஊரெல்லாம் கூடி ஒலித்து நிற்க - வெதும்பிய உள்ளம் குளிர்ப்புற - நீர்ப்பெருக்குடைய குளத்தில் என் தாய் நாளை மூழ்குவாள் ஆகலாம்; அன்றி, அவன் தாய் மூழ்குவள் ஆகலாம்; அன்றி, இருவர் தாயருமே மூழ்குவர் ஆகலாம் !” என்று ஒரு