உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

31

வீரன் முழங்கும் முழக்கம் (36) தமிழர் தம் போர் மாண்புக்கு ஒப்பதும் மிக்கதும் இல்லாத ஒருபெருஞ்சான்றாம். இன்னவை பிறவும் நூலினுள்ளே கண்டு மகிழ்க.

நன்றியுரை

1

தகடூர் யாத்திரையின் பெரும்பகுதியை நாம் கண்டு மகிழ்வதற்கு உதவிய பெருமகனார் புறத்திரட்டுத் தொகுப்பாசிரியர் என்பதை அறிவோம். மேலும் சில பாடல்களையும் அரிய குறிப்புகள் சிலவற்றையும் வழங்கியவர்கள் ஆசிரியர் நச்சினார்க்கினியர், பேராசிரியர், தக்கயாகப்பரணி உரையாசிரியர் ஆகியோர் ஆவர். தகடூர் யாத்திரைப் பாடல்களை மீண்டும் ஒரு தொகுப்பிலே இடம்பெறச் செய்தவர் அறிஞர் மு. இராகவ ஐயங்கார் அவர்கள். மறைந்துபோன நூல்களைப் பற்றிய குறிப்புகளை யெல்லாம் திரட்டி, அவற்றில் கிடைக்கும் பாடல்களையெல்லாம் நூல்வரியாகத் தொகுத்து உதவியவர் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள். இவர்கள் அனைவரும் ஆற்றிய அருமைத் திருப்பணிகளுக்குத் தமிழுலகம் மிக்க கடப்பாடுடையது. இவர்களுக்குப் பெரு நன்றியுடையேன்.

தகடூர் யாத்திரை தனிநூல் வடிவுகொண்டு, உரை விளக் கத்துடன் இப்பொழுது வெளிப்படுகிறது. இவ்வாறு வெளி வருதற்கும், மறைந்துபோன நூல்வரிசையிலே வக்கப் பட்ட ‘காக்கைபாடினியம்' முழுவடிவில் உரையுடன் வெளி வந்ததற்கும், 'பெரும்பொருள் விளக்கம்' என்னும் நூல் விரைவில் வெளிப்படுதற்கும் அடிப்படையாக இருந்தது யான், 'யாப்பருங்கல விருத்தி’ ‘களவியல் காரிகை' களவியல் காரிகை' 'புறத்திரட்டு’ என்னும் நூல்களைப் பதிப்பிக்கும் வாய்ப்புப் பெற்றமையேயாம். அவ்வாய்ப்பை எனக்கு உதவியவர்கள் கழக ஆட்சியாளர் தாமரைச் செல்வர் திருமிகு வ. சுப்பையா பிள்ளை அவர்கள் ஆவர். ஆதலால் அவர்களுக்கும் திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர்க்கும் உள்ளார்ந்த நன்றியுடையேன். வாய்மைக்கும் அன்புக்கும் வடிவங்களாக விளங்கிய எந்தையார் படிக்க ராமர்க்கும், எந்தாயார் வாழ வந்தம்மையார்க்கும் இத் 'தகடூர்மாலை' உரை விளக்கத்தை 'நினைவுமாலை'யாக்கி வணங்குகிறேன்.

அருளகம் 28.08.76

1. பெருந்தொகை.

தமிழ்த்தொண்டன், இரா. இளங்குமரன்.