உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை

அவையடக்கம்

அவையடக்கமாவது, புலவர் தாம் செய்த நூலிலே குற்றம் ஏற்றாதபடி, கற்றோரை வழிபட்டுத் தம் அடக்கத்தால் அவரை அடக்கிக்கொள்வது.

66

'அவையடக் கியலே அரில்தப நாடின்

வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மினென் றெல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தன்று”

என்பது தொல்காப்பியம். (செய். 112.)

நேரிசை வெண்பா

வியத்தக்க காணுங்கால் வெண்மையில் தீர்ந்தார்

வியத்தக்க தாக வியப்ப - வியத்தக்க

அல்ல எனினும் அறியாதார் தாம்போல எல்லாம் வியப்பர் இனிது.

-புறத்திரட்டு. 10.

(இதன்பொருள்) வியக்கத்தக்கவற்றைக் காணும்போது அறிவுடையார். ‘இது வியக்கத்தக்கதே' என உட்கொண்டு வியந்து பாராட்டுவர்; அவ்வாறு வியந்து பாராட்டுதற்குத் தக்க தகுதி இல்லாதவை ஆயினும் அவற்றை அறியாதார் வியந்து பாராட்டுவதுபோலவும் அறிவுடையார் வியந்து பாராட்டவும் செய்வர் என்றவாறு.

இதனால் கூறியது:-

66

அறிவுடையார் உரையை வியந்து பாராட்டுவதுபோல அறிவிலார் உரையையும் உரைத்தவரின் மகிழ்ச்சி ஒன்றையே கருதி அறிவுடையார் வியந்து பாராட்டுவர். ஆகலின், என் புல்லுரையையும் நல்லுரைபோலக் கொண்டு அறிவுடையார்