உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

இளங்குமரனார் தமிழ்வளம்

12

பொறுத்துக்கொள்வர் என்னும் துணிவால் இந் நூலைப் பாடுவான் புகுந்தேன்” என்று நூலாசிரியன் அவையடக்கம் கூறியவாறு.

(விளக்கவுரை) “வியக்கத்தக்கவற்றை வியத்தலே அன்றி வியக்கத்தக்க தகுதி இல்லாதவற்றையும் அறிவுடையார் வியப்பரோ?” எனின், “வியப்பர்' என்க.

“புல்லா எழுத்தில் பொருளில் வறுங்கோட்டி கல்லா ஒருவன் உரைப்பவும் கண்ணோடி நல்லார் வருந்தியும் கேட்பரே மற்றவன் பல்லாருள் நாணல் பரிந்து’

எனவரும் நாலடிப் பாட்டைக் கருதுக. (155)

அறிவிலார் முன்னர் அறியாதார் போலவே அறிவுடையார் அமைதல் வேண்டும் என்பதை அவையறிதல் அதிகாரத்தில் ஆசிரியர் திருவள்ளுவர்.

66

ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல்; வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல்”

எனக் கூறுவதால் தெளிக. அன்றியும்.

66

(714)

"ஒளியர் என்றது மிக்காரையும் ஒத்தாரையும்; அது விகாரத்தால் ஒளியார் என நின்றது. ஒள்ளியர் ஆதல் - தம் நூலறிவும் சொல்வன்மையும் தோன்ற விரித்தல். அவை அறியாத புல்லரை ‘வெளியார்' என்றது வயிரம் இல் மரத்தை 'வெளிறு' என்னும் வழக்குப் பற்றி. அவர் மதிக்கும் வகை, அவரினும் வெண்மை வண்மை யுடையராக என்பார், 'வான் சுதை வண்ணம் கொளல்' என்றார்" என்னும் பரிமேலழகர் உரையையும் அறிக.

இன்னும் 'வெண்மை', 'வெளிறு'

வின்மையைக் காட்டுதலை,

“வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு’

என்றும்,

“அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு”

என்பவை அறி

என்றும் வரும் குறள் மணிகளால் (844, 503) தெளிக.