உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

இராமாயணத்தில் ஒருவெள்ளை:

35

திருமால் குறள்வடிவுடன் மாவலியிடம் சென்று மூன்றடி மண் வேண்டினான்; இசைந்தான் மாவலி; நீரட்டுக் கொடுக்குமாறு கேட்டான் குறள் வடிவத் திருமால், “நீரட்டுத் தருதலால் கேடுண்டாம்; மண் தாராதே” எனத் தடுத்துநின்றான் சுக்கிரன். அதனை ஏற்றுக் கொள்ளாத மாவலி.

“வெள்ளியை ஆதல் விளம்பின மேலோர் வள்ளிய ராக வழங்குவ தல்லால் எள்ளுவ என்சில இன்னுயி ரேனும்

கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றால்”

என்று கூறிக் கூறியவாறே கொடைபுரிந்தான். இதில் சுக்கிரனை 'வெள்ளி' எனப் பெயரிட்டு அழைக்குமாறும், ‘அறிவிலி' என்று எள்ளியுரைக்குமாறும் இரட்டுற வைத்துள்ளமை இன்புறுத்துவதாம். பாரதத்தில் ஒருவெள்ளை :

66

தூதன் ஒருவனை அனுப்பித் துரியோதனன் எண்ணத்தை அறிந்து கொள்ளவேண்டும்" என்று பாண்டவரிடம் கண்ணன் பகர்ந்தான். அப்போது உடன் இருந்த பலராமன், “நாட்டைத் துரியோதனனிடமிருந்து மீட்டும் கேட்க எண்ணும் தீய எண்ணம் மிகக் கொடுமையானது" என்றான்.பலராமன் வெண்ணிறத்தினன் 'பால்நிறவண்ணன்' என்றும், 'வால்வளை மேனியன்' என்றும் கூறப்பெறுபவன். ஆகையால். ஆ

"இளைய சாத்தகி தமையனை மிகக்கரி திதய மாயினு நாவில் விளையு மாற்றநின் திருவடி வினுமிக வெள்ளை யாகிய தென்ன என்று எள்ளியுரைத்தான். இதனைப் பாரத வெண்பா, “மான மணிவரைத்தோள் வாழ்வேந்தீர் மற்றிவன்தன் மேனியிற் காட்டி வெளுத்ததே - தானோர் அறத்தினால் அன்றியே அன்பொருபால் ஓடி

மறத்தினால் கட்டுரைத்த வாக்கு'

என்று கூறுகின்றது.

وو

அறியாமை கலந்த பார்வையை, "வெள்ளமை கலந்த நோக்கு" எனச் சிந்தாமணியும், அறிவின்மை இன்மையை, வண்மை இல்லைபல் கேள்வி மேவலால்’ எனக் கம்பராமாயணமும் கூறும்.