உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

இளங்குமரனார் தமிழ்வளம்

12

766 கடல்நீர் உவர்ப்புடைய தெனினும் அதிற்பிறந்த பவழம் முத்து முதலிய அரும் பொருள்களை எவரும் வேண்டா என விலக்கார். அதுபோல் என் சொல் பழுதுடையதே எனினும் அச்சொல் வழங்கும் பொருளின் உயர்வால் இந்நூலின் அறிவினர் விலக்கார்” என்றும்.

2“கழுவித் தூய்மை செய்தலால் மாணிக்கக் கல்லை ஒளி மிக்கது ஆக்குவர்; அதுபோல் கறைபடிந்த என் சொல்லையும் ஆன்றோர் தம் அறிவு நீரால் கழுவித் தூயதாக்கிக் கொள்வர்’ என்றும்,

3"நோயுடையார் மருந்தின் சுவை நோக்கார்; குளிர்காய நினைவார் புகைத் தீமையைக் கருதார்; அவற்றைப்போல் குற்ற மற்ற முதல்வன் புகழ் கூறும் என் சொற்குற்றத்தைக் குற்றமென க் கொள்ளார் பெரியோர்" என்றும்,

4“சிறுபிள்ளைகள் வீடுகட்டி விளையாடுவதைக் கண்ட சீரிய கட்டட அமைப்பாளர், 'இது முறையோடு அமைய வில்லை' எனக் குற்றம் கூறார். அதுபோல் என் நூலிற் காணும் குற்றத்தையும் அறிவாளர் வெறுத்துக் கூறார்” என்றும் பிறரும் அவையடக்கம் கூறினார்.

யாப்பமைதி:

வியத்தக்க என்னும் சொல்லும் பொருளும் பன்முறை இவ்வெண்பாவுள் வருதலால் இது சொற்பொருள் பின் வருநிலையணியாம்.

முன்னிரண்டடியும் ஓரெதுகையாகவும் பின்னிரண்டடியும் ஓரெதுகையாகவும் வந்திருத்தலானும் இரண்டாம் அடியின் இறுதிச் சீர் தனிச் சொல்பெற்று முதற் சீருக்குரிய எதுகையுடன் நிற்றலானும் இஃது இருவிகற்ப நேரிசை வெண்பா ஆகும்.

1. சிந்தாமணி

3. குண்டலகேசி.

2.

சிந்தாமணி

4. கம்பராமாயணம்.