உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்

1. நீத்தார் பெருமை

நீத்தார் பற்றற்றவர்; முற்றத் துறந்தவர்; அவராவார் தந்நலம் அறத் துறந்தவர்; அவர் பெருமை கூறுவது நீத்தார் பெருமை ஆயிற்று.

66

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு”

என்றார் பொய்யாமொழியார் ஆதலின்.

மருட்பா

1. கிழிந்த சிதாஅர் உடுத்தும் இழிந்தார்போல் ஏற்றிரந் துண்டும் பெருக்கத்து நூற்றிதழ்த் தாமரை அன்ன சிறப்பினர்; தாமுண்ணின்

தீயூட்டி உண்ணும் படிவத்தர்; தீயவை

ஆற்றுழி ஆற்றிக் கழுவுபு தோற்றம்

அவிர்முருக்கந் தோலுரித்த கோலர்; துவர்மன்னும்

ஆடையர்; பாடின் அருமறையர்; நீடின்

உருவம் தமக்குத்தாம் ஆய

இருபிறப் பாளர்க் கொரூஉகமா தீதே.

புறத். 19. இ. ள்) கிழிந்த உடை யை உடுத்தியும், எளியவர்போல் பிறரிடம் கையேந்தி இரந்து பெற்று உண்டும், செறிந்த இதழ் களையுடைய தாமரை மலரன்ன சிறப்பினராகவும், தாம் அரிதின் உண்ணுங்கால் முதற்கண் தீக்கு உண்பித்த பின்னரே உண்ணும் நோன்பினராகவும், பிறர் தமக்குத் தீமைசெய்த காலையும் அதனைப் பொறுத்து அவர்செய் தீமையால் அவர்க்குக் கேடுறாவண்ணம் கழுவாய் தேடும் பெருமையினராகவும், தோல் உரிக்கப் பெற்ற, விளங்கிய, திரிந்து வளைந்த முக்கோல்