உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இளங்குமரனார் தமிழ்வளம்

வண்ணக் காவி

12

வனப்புற

உடையவராகவும், அமைந்த உடையினராகவும், அருமறையினை இனிதுற இசைப்பவராகவும், சிறந்த வடிவில் தமக்குத் தாமே இணையானவராகவும் திகழும் அந்தணர்க்குத் தீங்கெதுவும் செய்யாது தவிர்வாயாக என்றவாறு.

-

து: -இது நீத்தார் பெருமை கூறுமுகத்தான் அவர் வழி

நின்று அருநலம் எய்தலாம் என்று கூறியது.

(வி-ரை.) அந்தணராவார் அறவோர்; அவர்க் கமைந்த அறத்தன்மையாவது அருளே. இதனை,

66

அந்தணர் என்போர் அறிவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்

6

என்னும் குறளால் அறியலாம். அவ் வந்தணர் தன்மையை விரித்துக் கூறியது இத்தகடூர் யாத்திரைப் பாட்டு.

'சிதாஅர்' என்பது கந்தையாடை. ‘கிழிந்த சிதாஅர்' என்றமையால் மிகக் கிழிந்த ஆடை என்பது போதரும்.

"நீனிறச் சிதாஅர் களைந்து

வெளிய துடீஇ”

என அம்பர்கிழான் அருவந்தையைக் கல்லாடனாரும் (புறம். 385)

66

அரவின் நாவுருக் கடுக்கும் என்,

தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கிப்

போதுவிரி பகன்றைப் புதுமலர் அன்ன

அகன்றுமடி கலிங்கம் உடீஇ”

எனக் கிள்ளிவளவனை நல்லிறையனாரும் (புறம். 393.)

66

எனதரைத்,

துரும்புபடு சிதாஅர் நீக்கித் தன்னரைப்

புகைவிரிந் தன்ன பொங்குதுகில் உடீஇ"

எனச் சேரமான் வஞ்சனைத் திருத்தாமனாரும் (புறம். 398.)

“தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி மிகப்பெருஞ் சிறப்பின்

கலிங்கம் அளித்திட் டென்னரை நோக்கி”

எனச் சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழாரும் (புறம். 400.)