உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

39

“நீர்ப்படு பருந்தின் இருஞ்சிற கன்ன

நிலந்தின் சிதாஅர் களைந்த பின்றை

நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ

எனவும் (பதிற்று. 12.)

66

கூதிர்ப் பருந்தின் இருஞ்சிற கன்ன பாறிய சிதாரேன்”

எனவும் (புறம். 150.) வருவனவற்றாலும் சிதாரின் இழிபாடும் கலிங்கம் துகில் என்பனவற்றின் மேம்பாடும் தெள்ளிதிற் புலப்படும். உடுத்திய சிதாருடை கொண்டும், உண்ட ஏற்றிரந்த உணவு கொண்டும் அந்தணர் தன்மையை அளவிட்டுக் கொள்ளற்க என்பாராய் அவர்தம் சீரிய தன்மைகளை அடுக்கிக் கூறினார். ‘ஆடை பாதி ஆள் பாதி”

66

என்றும்,

“மேலாடை இன்றிச் சபைபுகுந் தால்இந்த மேதினியோர் நூலா யிரம்படித் தாலும் பெரிதென் றெண்ணார்"

என்றும்,

"விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்

விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனில் பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை நஞ்சேனும் வேம்பேனும் நன்று”

என்றும்,

“பல்லெலாம் தெரியக் காட்டிப் பருவரல் முகத்திற் கூட்டிச் சொல்லெலாம் சொல்லி நாட்டித் துணைக்கரம் விரித்து நீட்டி மல்லெலாம் அகல வோட்டி மானமென் பதனை வீட்டி இல்லெலாம் இரத்தல் அந்தோ இழிவிழி வெந்த ஞான்றும்

என்றும்,

66

‘கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி யுறும்

என்றும் உலகியல் நிலையும் இலக்கியவழக்கும் இருத்தலால் சிதார் உடுத்து ஏற்றிரந்து உண்பார் இழிந்தவர் ஆவரோ