உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இளங்குமரனார் தமிழ்வளம்

12

என்பார்க்கு நீத்தார் நீர்மைச் நீத்தார் நீர்மைச் சீர்மையைக் சீர்மையைக் கூறுவாராய், “நூற்றிதழ்த் தாமரை அன்ன சிறப்பினர்” என்றார்.

66

நூற்றிதழ் என்றது இதழ்ச் செறிவைக் காட்டி நின்றது. பூவெனப் படுவது பொறிவாழ் பூவே” என்பராகலின் “பெருக்கத்து நூற்றிதழ்த் தாமரை அன்ன சிறப்பினர்” என்றார். சேற்றிலே தோன்றி அதன்கண்ணே நிற்பினும் தன் சீரிய தன்மையில் குன்றாமையும், தெய்வம் உறையும் திருத்தகவும், நீர் ஒட்டாத நீர்மையும் பிறபிற நலங்களும் உடையது ‘திருவளர் தாமரை’ ஆகலின் அத் தாமரைச் சிறப்பெல்லாம் நீத்தார்க்கும் ஏற்றிக் கொள்ளுமாறு உவமைப்படுத்தினார்.

பிறரும் குடிச்சிறப்புக்கு இவ்வாறே,

“சேற்றுவளர் தாமரை பயந்த ஒண்கேழ் நூற்றிதழ் அலரி நிரைகண் டன்ன

வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து வீற்றிருந் தோர்”

என்றார்.

(புறம். 27.)

‘விழுத்திணை' யாவது சிறந்த குடி. இதனை, “விறற் புகழ், வசையில் விழுத்திணைப் பிறந்த இசைமேந் தோன்றல்” என்று குமணனைப் பெருஞ்சித்திரனார் கூறுமுகத்தான் விளக்கினார் (புறம். 159.)

எத்துணையும் வேறுபாடு இன்றி, எவ்வுயிரும் தம்முயிராய் எண்ணி, ஒத்துரிமை உடையவராய் உதவுவதைக் கடப்பாடு எனக் கொண்டவர் நீத்தார். வாடிய பயிரைக் கண்டு வாடி நலிவதும், பசியினால் அயர்வாரைக் கண்டு பரிவு மீக்கூர்ந்து நைவதும் அவர்க்கு இயல்பு. அவ்வியல்பின் வெளிப்படு விளக்கம் அற்றார் அழிபசி தீர்த்தல் ஆகும். உயிரில்லாப் பொருளாகி எரிப்பதே இயல்பாகிய தீயிற்கும் உணவூட்டுவதைக் குறித்தார்; இவர் மற்றை உயிர்களை உண்பித்துத் தாம் உண்ணல் வெளிப்படை ஆகலின். இது,

66

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது”

எனப் புல்லும் தலைகாட்டாமை கூறியமையால் மற்றையவை வளரா, வாழா எனக் குறித்தாங்குக் கொள்க.