உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

وو

41

ஏற்றுண்பாராகிய நீத்தார் ஈத்துண்பரோ எனின் அதனைக் காட்டுதற் கன்றே, 'தாம் உண்ணின் தீமூட்டி உண்ணும்' என்றார். 'ஒருபோதுண்பான் யோகியே' என்றும், 'பொழுதுமறுத்துண்ணும் மங்கை' என்றும், கூறுவராகலின் ‘உண்ணின்' என்றார்.

படிவம் என்பது வடிவம் படிந்து நிற்கும் தன்மை. இதனைத், “துறந்தார் படிவத்தர் ஆகி” என்பதால் (திருக். 586) அறிக. இனிப் படிவம் என்பது நோன்புமாம். நோற்றுப் பட்டினிவிட்டு உண்ணும் உணவைப் ‘படிவ உண்டி' (குறுந்.156) என்றும், அவ்வாறு உண்பவரைப் ‘படிவ உண்டியர்' என்றும், 'படிவ நோன்பியர்' என்றும் (மணி 5: 33; 28: 224) கூறுவதால் அறியலாம்.

பிறர்க்குத் தீமை நினையாமை முதல் நிலை; பிறர் தமக்குச் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்ளுதல் அதனின் உயர்நிலை தீமை செய்தார்க்கும் நன்மை செய்தலும், அவர் தீமை செய்ததன் பயனாகவரும் கேடின்றிக் கடைத்தேறும் வண்ணம் திருவருளை வேண்டிக் கிடத்தலும் அதனினும் உயர்நிலை. அந் நிலைக்கு உயர்ந்தவர் இந் நீத்தார் என்பதை உட்கொண்டு.

66

“தீயவை ஆற்றுழி ஆற்றிக் கழுவுபு தோற்றம்”

என்றார்,

இவற்றை,

“உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு'

என்றும்,

66

99

“கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள்'

என்றும்,

“இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்

என்றும்,

66

'இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு

என்றும் வரும் குறள் மணிகளால் (261, 312, 314, 987) அறிக.