உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

இளங்குமரனார் தமிழ்வளம்

12

தீயவை புரிவாரை ஆற்றிப் பொறுப்பதுடன் அவர்க்காகப் பரிந்து உருகுதலை,

66

‘தம்மை இகழ்ந்தாரைத் தாம்பொறுப்ப தன்றிமற்

றெம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று பரிவதூஉம் சான்றோர் கடன்'

என்னும் நாலடியால் (58) அறிக.

தோற்றமாவது உயர்வு. அது.

"நிலையிற் றிரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது”

என்னும் குறளாற் (124). புலப்படும்.

கோல் என்பது முக்கோல்; திரிதண்டம், திரிதண்டு

என்பனவும் அது.

“நூலே கரகம் முக்கோல் மணையே

ஆயுங் காலை அந்தணர்க் குரிய"

என்பது தொல்காப்பியத்தில் காணப்பெறும் ஒரு நூற்பா.

(மரபு. 71.)

குடையும் கோலும் கரகமும் உடையவராக அந்தணர்

இருந்தனர் என்பதை,

66

எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடைநீழல்

உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும்

நெறிப்படச் சுவலசைஇ வேறொரா நெஞ்சத்துக்

குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை அந்தணீர்"

எனவரும் கலித்தொகையான் (9) அறியலாம்.

இனி, அக்கோலை ஊன்றி அந்திப்பொழுதில் அந்தணர்

அருமறை நினைவர் என்பதை,

“பொன்மலை சுடர்சேரப் புலம்பிய இடன்நோக்கித்

தன்மலைந் துலகேத்தத் தகைமதி ஏர்தரச்

செக்கர்கொள் பொழுதினான் ஒலிநீவி இனநாரை