உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

முக்கோல்கொள் அந்தணர் முதுமொழி நினைவார்போல் எக்கர்மேல் இறைகொள்ளும் இலங்கு நீர்த் தண்சேர்ப்ப”

எனவரும் கலிப்பாட்டான் (126) அறியலாம்.

66

முக்கோல் கொள்ளுதல், “காமம் வெகுளி மயக்கம்

43

மூன்றன் நாமமும் விடுத்தமைக்கு அடையாளம் என்றும், ‘ஆணவம், கன்மம், மாயை” என்னும் மும்மலமும் கடந்தமைக்குச் சான்று என்றும், “மனம், வாக்கு, காயம்” என்னும் முக்கரணமும் ஒடுங்கியமைக்கும் காட்டு என்றும் கூறுவர்.

66

முக்கோல் - திரிதண்டம். அது மூன்றுகோல் ஒன்றாகச் சேர்த்துக் கட்டப்பட்ட தண்டு” என்பது கதிர்வேல் பிள்ளை அகராதிக் குறிப்பு, முக்கோல் உடையவரை, “முக்கோற் பகவர்’ என்பார் நாற்கவிராச நம்பியார். (நம்பியகப் பொருள். 188) அவிர்முருக்கந் தோல் உரித்த கோலர் என்பது சிறந்து விளங்கும் முருக்கின் தோல் உரிக்கப் பெற்ற கோலை உடையவர் என்றுமாம். முருக்கின்கோலைத் தண்டாகப் பயன்படுத்துதல், "செம்பூமுருக்கின் நன்னார் களைந்து, தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்து” எனவரும் குறுந்தொகையாற் (156) புலனாம்.

L

துவர் மன்னும் ஆடையர் என்பது காவியுடையர் என்பதாம். துவர் என்பது ஒருவகைச் செந்நிறம். துவர் நிறப்பயறு ‘துவரை’ என வழங்கப் பெறுதலும், செந்நிறம் உடையதும் துவர்ப்பதும், ஆகிய ஒருபொருள் ‘துவர்ப்பு’ என வழங்கப் பெறுதலும், செந்நிறக் கற்பாறையும் செம்மண் மேடுமாக அமைந்த மலையும், அம் மலை சார்ந்த ஊரும் துவரங் குறிச்சி என வழங்கப் பெறுதலும் கண்டறிக.

துவராடை என்பது காவிநிறம் ஏறிய அல்லது காவிநிறம் ஏற்றப்பெற்ற ஆடை. தோய்த்துப் பிழிந்து வெயிற்படாது உலர்த்தப் பெறும் ஆடை நாளடைவில் பழுப்பேறிக் காவி நிறமாதல் கண் கூடு.

வி

அந்தணர் சிவந்த ஆடை உடுத்தும் போர்த்தும் இருந்தனர் என்பதைப் 'பொன்மலை சுடர்சேர’ என்னும் கலிப்பாட்டில் நாரைக்கு அவரை ஒப்பிட்டமையால் உணரலாம். அதன் உரைக் கண், “பெரிய நாரை சிறகு சிவந்திருத்தலானும் மூக்குத் தரையிலே சென்று குத்துதலானும் அதனை முக்கோலை ஊன்றி றி யிருந்த அந்தணரோடு ஒப்புரைத்தார்” என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் எழுதுவது கருதத் தக்கது.