உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இளங்குமரனார் தமிழ்வளம்

12

‘பாடின் அருமறையர்' என்பது அரிய மறைகளை இனிதுற சையெழுப்பிப் பாடுபவர் என்னும் பொருளது. பண்டே தமிழில் மறைகள் உண்மை ‘அந்தணர் மறைத்தே' என்றும், இசையொடு சிவணிய நரம்பின் மறை' என்றும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுவதால் (எழுத்து 102, 33) அறிக.

“இன்னிசை வீணையர் யாழினர்"

என்பது மணிவாசகர் வாக்கு. (திருவா. 20.4)

“பாடினார் சாம வேதம் பைம்பொழிற் பழனை மேயார்”

என்பது அப்பாரடிகள் வாக்கு. (தேவா. 4: 68- 8)

'தமக்குத் தாம் ஆயவர்' என்பதால் ஒப்பிலார் என்றார். ஈடு இணை இல்லார் இவர் என்க. உவமையைக் கூறி மறுக்காமல் தானே உவமை தனக்கு” என்னும் வாய்பாட்டால் கூறியது (தண்டி. 31) இது.

66

இருபிறப்பாவது உடற்பிறப்பு ஒன்றும், அறிவுப் பிறப்பு மற்றொன்றும். அவ்விரண்ட அவ்விரண்டனையும்

ருபிறப்பாளர் எனப்பெற்றார்.

உடையார்

தீது ஒரூஉகமா என்பது தீமை செய்தலைத் தவிர்க என்பதாம். 'மா' அசைநிலை. 'உண்கமா கொற்கையோனே' என்பதிற் போல வந்தது. 'மாஎன் கிளவி வியங்கோள் அசைச் சொல்' என்பது தொல்காப்பியம். (இடை. 25)

ஒருவுதல் என்பது விலகுதல், தவிர்தல்; மருவுதலுக்கு

முரண்.

"மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு”

என்றும்

- (திருக். 800)

“யானை அனையவர் நண்பொரீஇ நாயனையார் கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் - யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல் மெய்யதா வால்குழைக்கும் நாய்

99

(நாலடி. 213)

என்றும் வருவனவற்றால் ஒருவுதல் இப் பொருட்டதாதல் புலப்படும்.

அந்தணர்க்குத் தீங்கு செய்யாமை அன்றிப் பேணிக்

காத்தலும் கடன் என்பதை,