உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

அருமறை அந்தணர் ஆங்குளர் வாழ்வோர் பெருநில மன்ன காத்தல்நின் கடனென்று'

45

- (சிலப். 26: 102-3)

விசும்பியங்கு முனிவர் செங்குட்டுவனிடம் உரைத்ததாக இளங்கோ வடிகள் இயம்புவார்.

இனி, அவரை ஓம்பும் முறைமை ஒரு சேயைத் தாய் ஓம்பும் முறைமை போல்வதாம். இதனை,

“அருளும் அன்பும் நீக்கி நீங்கா

நிரயம் கொள்பவரொ டொன்றாது காவல் குழவி கொள்பவரின் ஓம்புமதி

என்னும் புறப்பாட்டால் (5) தெளியலாம்.

யாப்பமைதி:

ஒன்பதடியான் வந்த இப் பாடலின் முதல் ஏழு அடியும் வெண்பா யாப்பும், பின்னிரண்டு அடியும் ஆசிரிய யாப்பும் உடை மையால் வெண்பா முன்னாக ஆசிரியம் பின்னாக’ மயங்கி அமைவதாம் மருட்பா ஆகும். இனி ஒன்பதடியும் வெண்டளை பிழையாமை வந்தமையானும், ஆசிரிய முடிவு எய்தியமையானும் வெண்டளையான் வந்த நேரிசை ஆசிரியப்பா எனினும் அமையும். ஈற்றயலடி முச்சீராக வருதல் நேரிசை ஆசிரியப்பாவின் பொது இலக்கணமாம்.

நீத்தார் பெருமை கூறும் இப் பாட்டு செவியுறைப் பொருளதாம். என்னை?

"செவியுறை தானே,

பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண் அவிதல் கடனெனச் செவியுறுத் தன்றே'

என்றார் ஆகலின் (தொல். செய். 113)

இனிச் செவியுறைப் பொருள், மருட்பாவினால் கூறப் பெறுதல்,

"புறநிலை வாயுறை செவியறி வுறூஉவெனத் திறநிலை மூன்றும் திண்ணிதிற் றெரியின் வெண்பா இயலினும் ஆசிரிய இயலினும் பண்புற முடியும் பாவின என்ப

என்பதால் கொள்க. (தொல். செய். 159)

(1)