உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

"குன்றக் குறவன் காதல் மடமகள்

'வரையர மகளிர்ப் 'புரையும் சாயலள் 3ஐயள் அரும்பிய முலையள்

செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே’

6 எனவும்,

“சீயம் சுமந்த மாசறு மணியணை

4மேய 5உரவோன் சேவடி

வாயின் வாழ்த்த வானுல கெளிதே

- ஐங்குறு. 255.

திருப்பாமாலை,

எனவும் இவற்றுள் இயற்சீர் நான்கும் வந்தன.

ஈரசைச்சீர் பிறிதாகாது எல்லாப் பொருள் மேலும் சொல்லப்படும் சிறப்புடைமையானும், “முதற்பா இரண்டி னுள்ளும் பெரும்பான்மை இயன்று இனிது நடத்தலானும் இயற்சீர்' என்பது 'காரணக்குறி.

  • "ஒரோஒ வகையினால் ஆகிய ஈரசைச் சீரியற் சீரெனச் செப்பினர் புலவர்”

என்றார் காக்கைபாடினியார்

கூடிய' என்ற மிகையான், இயற்சீரை ‘ஆசிரிய உரிச்சீர்’ என்றும் வழங்குவாரும் உளர். என்னை?

"இயற்சீர் எல்லாம் ஆசிரிய உரிச்சீர்”

என்றார் காக்கைபாடினியார்.

உரிச்சீரின் திறமும் தொகையும்

கஉ மூவகைச் சீர்உரிச் சீர்இரு நான்கனுள் நேரிறு நான்கும் வெள்ளை; அல்லன

பாவினுள் வஞ்சியின் பாற்பட் டனவே.

(உ)

‘என்பது என் நுதலிற்றோ?' எனின், ‘உரிச்சீர்” ஆமாறும், எண்ணும், பெயர்வேறுபாடும் உணர்த்துதல்

அவற்றது நுதலிற்று.

1. மலை வாழ் தெய்வப் பெண்டிர் 2. ஒக்கும். 3. அழகிய ; வியக்கத் தக்கவள். 4. அமர்ந்த. 5. வலியோன் அருகன். 6. வெண்பாவும் ஆசிரியப்பாவும்.

7.

“இஃது ஆட்சியும் குணனும் காரணமாகப் பெற்ற பெயர். 1. ஆட்சி: ‘இயற்சீர் இறுதிமுன் நேரவண் நிற்பின்’ எனவும் (தொல். செய். 19) பிறாண்டும் ஆளும். 2. குணம் : இயற்சீராகலாணும், நான்கு பாவிற்கும் இயன்று வருதலானும் குணம் காரணமாயிற்று. இயல்பு வகையான் ஒரோ ஒன்றாகி நின்ற சொற்கள் வருதல் பெரும்பான்மையாகலானும், நான்கு பாவிற்கும் பொதுவாகி இயன்று வருதலானும் இயலசையான் வரும் ஈரசைச் சீர் ஆதலானும், இவற்றை ஒரு பாவிற்கு உரிமை கூறுதல் அரிதாகலானும், இவற்றை ‘இயற்சீர்’ என்றான். (தொல். செய். 13 பேரா.)

(பா. வே. ) *ஒரோ அகை. அகை- கூறுபாடு (சீவக. 2694).