உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

85

-ள்) மூவகைச்சீர் உரிச்சீர் இரு நான்கனுள் - மூன்று அசையான் ஆகிய சீர் உரிச்சீர்; அஃது எட்டு வகைப்படும்; அவற்றுள், நேர் இறு நான்கும் வெள்ளை - நேரசை இறுதி யாகிய நான்கும் வெண்பா உரிச்சீர்; அல்லன பாவினுள் வஞ்சியின்பாற் பட்டனவே அவை அல்லனவாகிய நிரையசை இறுதியாகிய நான்கும் பாவகையுள் வஞ்சிப்பாவின் பகுதியாய் வஞ்சி உரிச்சீர்' எனப்படும் என்றவாறு.

‘பாவினுள் வஞ்சியின் பாற்பட்டனவே,' என்ற சிறப்பால், வஞ்சி உரிச்சீர் பிற செய்யுளுள் வரினும், வஞ்சிப்பாவினுட் போல இனி னிது நடவா என்க.

வெண்பா உரிச்சீர் நான்கிற்கும் வாய்பாடு :

66

"தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங் காய்' என்பன.

இனி,

“பூவாமா, விரிபூமா, நறுவடிமா, பூவிரிமா”

எனவும்,

6

பொன்னாக்கும், பொருளாக்கும், பொருள்பெருக்கும், பொன்பெருக்கும்'

எனவும்,

“தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு தென்கிழக்கு”

6 எனவும்,

"வேய்மென்றோன், வளைமென்றோள், வளைகெழுதோள்,

எனவும் வரும். பிறவும் அன்ன.

அவற்றிற்குச் செய்யுள் :

“பொன்னார மார்பிற் புனைகழற்காற் 'கிள்ளிபேர்

3

வேய்கெழுதோள்"

2உன்னேனென் 'றூழுலக்கை பற்றினேற் - 4கென்னோ மனனோடு வாயெல்லாம் மல்குநீர்க் 'கோழிப் புனனாடன் பேரே வரும்!”

யா. கா. 9. மேற்.

“வான்றோயும் பொன்னெயிலான் வண்டார் மலரடிக்கீழ்த் தேன்றோய் மலர்பெய்ம்மின் சென்று’

என்னும் இவற்றுள் வெண்பா உரிச்சீர் நான்கும் வந்தன.

1.

சோழன். 2. நினையேன். 3. நினைப்பழிதல். 4.எக்காரணத்தாலோ. 5. உறையூர். 6. நீர்வளமிக்க சோழநாடன்.