உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

வஞ்சி உரிச்சீர் நான்கிற்கும் வாய்பாடு:

“தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி”

66

என்பன,

இனி,

மாவாழ்சுரம், புலிவாழ்சுரம், புலிபடுசுரம், மாபடுசுரம்”

எனவும்,

6

“பூவாழ்பதி, திருவாழ்பதி, திருவுறைபதி, பூவுறைபதி”

எனவும்,

“மீன்வாழ்துறை, சுறவாழ்துறை, சுறமறிதுறை, மீன்மறிதுறை”

எனவும்,

“பூண்மென்முலை, புணர்மென்முலை, புணரிளமுலை, பூணிளமுலை"

எனவும் வரும்.

அவற்றிற்குச் செய்யுள் :

1சுறமறிவன துறையெல்லாம் ;

2

இறவீன்பன இல்லெல்லாம் ;

மீன்றிரிவன கிடங்கெல்லாம் ; தேன்றாழ்வன பொழிலெல்லாம்;

எனவாங்கு,

3தண்பணை தழீஇய இருக்கை மண்கெழு *நெடுமதில் மன்னன் ஊரே

எனவும்,

66

"தாளோங்கிய தண் "பிண்டியின்

நாண்மலர்விரி தருநிழற்கீழ்ச்

சுடர்பொன்னெயில் நகர்நடுவண்

அரியணைமிசை இனிதமர்ந்தனை

அதனால்,

பெருந்தகை அண்ணல்! நிற் ‘பரவுதும்

திருந்திய °சிவகதி சேர்கயாம் எனவே"

யா. கா. 22. மேற்.

- திருப்பாமாலை,

1.

எனவும் வரும் இவற்றுள் வஞ்சியுரிச்சீர் நான்கும் வந்தன. பூந்தாமரைப் ’போதலமரத்

8தேம்புனலிடை மீன்றிரிதரு

வளவயலிடைக் 'களவயின்மகிழ்

சுறாமீன் திரிவன. 2.தேன்கூடு. 3. மருத நிலம். 4. அசோக மரம். 5. வணங்குவோம் 6. சமணர் கூறும் முத்தி நிலை (சிலப் 10: 180) 7. மலர் அசைய. 8. இனிய நீர். 9. களவொழுக்கத்தில்.

(பா. வே) *வளரிளமுலை. *செங்கோல்.