உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

87

'வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்

மனைச்சிலம்பிய மணமுரசொலி

வயற்கம்பலைக் கயலார்ப்பவும்

நாளும்,

மகிழும் 3மகிழ் தூங் கூரன்

புகழ்தல் "ஆனாப் பெருவண் மையனே’ - யா. வி. 15. 21. 90. மேற்.

எனவும் கொள்க.

6

ச்சூத்திரம் மொழிமாற்று. எங்ஙனமெனில்,

"மூவசைச் சீருரிச் சீரிரு நான்கினுள்

நேரிறு நான்கும் வெண்பா உரிச்சீர்;

நிரையிறு நான்கும் வெண்பா உரிச்சீர் ;

யா. கா. 9. மேற்.

நிரையிறு நான்கும் வஞ்சி யுரிச்சீர்.

என்றாராகலின்.

"இயற்சீர் இறுதிமுன் நேரவண் நிற்பின்

உரிச்சீர் வெண்பா ஆகும் என்ப”

- தொல். செய். 19.

எனத் தொல்காப்பியனார் 'வெண்பா உரிச்சீர்' என்றதனை மொழி மாற்றி உரிச்சீர் வெண்பா' என்றார். அதுபோலக்

கொள்க.

5நேரீறாகிய மூவசைச்சீர் நான்கும் பெரும்பான்மையும் வெண்பாவுக்கே உரிமை பூண்டு நிற்றலின், 'வெண்பா உரிச்சீர்' என்பதூஉம் காரணக்குறி; ‘நிரையீறாகிய மூவசைச்சீர் நான்கும் பெரும்பான்மையும் வஞ்சிப்பாவிற்கே உரிமை பூண்டமையின், வஞ்சி உரிச்சீர்' என்பதூஉம் காரணக்குறி. என்னை?

66

'மூவசை யான்முடி வெய்திய எட்டனுள்

அந்தம் 'தனியசை வெள்ளை ; அல்லன வஞ்சிக் கிழமை வகைப்பட் டனவே

என்றார் காக்கைபாடினியார்.

“ஈரசை யாகிய மூவசைச் சீர்தான்

நேரிறின் வெள்ளை; நிரையிறின் வஞ்சி” என்றார் சிறுகாக்கை பாடினியார்.

1.

வேலைசெய்வார் ஒலி. 2. மனையில் ஒலிக்கவும். 3. மகிழ்ச்சி தங்கியுள்ள மருத நிலத் தலைவன். 4. கெடாத. 5. தேமாங்காய், புளி மாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய் ஆகியவை. 6. தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி ஆகியவை. 7. நேரசை.