உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

“ஈரசைச் சீர்நான் கியற்சீர் மூவசையின் இயற்சீர் எட்டினுள் அல்லன விரவினும் நேரிறின் வெள்ளை நிரையிறின் வஞ்சி”

என்றார் அவிநயனார்.

பொதுச்சீரின் திறமும் தொகையும்

கஙு. நாலசைச் சீர்(பொதுச் சீர்)பதி னாறே.

‘என்பது என் நுதலிற்றோ?' எனின், நிறுத்த முறையானே 'பொதுச்சீர்’ ஆமாறும், அவற்றது எண்ணும் உணர்த்துதல் நுதலிற்று.

-

இ-ள்) நாலசைச்சீர் பொதுச்சீர் - நாலசையானாகிய சீர் பொதுச்சீர்’ எனப்படும்; பதினாறே அவைதாம் பதினாறு திறத்தன என்றவாறு.

அவற்றுள் 'நேர் இறுதி எட்டும், 2 நிரை இறுதி எட்டுமாம்,

என்னை?

“ஈரசைச்சீர் பின்முன் னாவைத் துறழ்ந்து. மாறியக்கால் நாலசைச் சீர்பதி னாறாம்

என்றார் அவிநயனார்.

அவற்றிற்கு வாய்பாடு:

1. தேமாந்தண்ணிழல் 2. புளிமாந்தண்ணிழல் 3. கருவிளந்தண்ணிழல் 4.கூவிளந்தண்ணிழல்

6

எனவும்,

5. தேமாந்தண்பூ 6. புளிமாந்தண்பூ 7. கருவிளந்தண்பூ 8. கூவிளந்தண்பூ எனவும்,

9. தேமாநறும்பூ 10. புளிமாநறும்பூ 11. கருவிளநறும்பூ 12.கூவிளநறும்பூ எனவும்,

6

13. தேமாநறுநிழல் 14. புளிமாநறுநிழல் 15. கருவிளநறுநிழல் 16. கூவிளநறுநிழல்

எனவும் கொள்க.

"தேமா புளிமா கருவிளங் கூவிளமென்

றாமா றறிந்தவற்றின் அந்தத்து - நாமாண்பின் தண்ணிழல் தண்பூ நறும்பூ நறுநிழலும்

‘நண்ணுவிக்க நாலசைச்சீர் ஆம்

இதன் வழியே 4ஒட்டுக.

1.

தண்பூ நான்கும், நறும்பூ நான்கும் ஆகிய எட்டு. 2. தண்ணிழல் நான்கும், நறு நிழல் நான்கும் ஆகிய எட்டு. 3. இணைக்க, 4. பொருத்துக.