உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

“ஊழி நீ; உலகு நீ; உருவும் நீ; அருவும் நீ;”

97

யா. வி. 83. மேற்.

என்னும் அம்போதரங்க உறுப்பின்கண்

பொதுச்சீர் வந்தன.

6

66

(கலி விருத்தம்)

கை விரிந்தன காந்தளும் பூஞ்சுனை

மை விரிந்தன நீலமும் *வான்செய்கண் மெய் விரிந்தன வேங்கையும் *சோர்ந்ததேன் நெய் விரிந்தன நீளிருங் குன்றெலாம்

எனவும்,

66

1

ஓரசைப்

99

சூளாமணி. 17

(கலி விருத்தம்)

குர வணங்கிலை மாவொடு சூழ்கரைச் சர வணம்மிது தானனி போலுமால் அர வணங்குவில் ஆண்டகை சான்றவன்

பிரி புணர்ந்துழி வாரலன் என்செய்கோ!”

- யா. வி. 15; 94. மேற்.

எனவும் பாவினங்களுள் முதற்கண் 2நேரசைப் பொதுச்

சீரும், 3நிரையசைப் பொதுச்சீரும் வந்தன.

இனி, இயற்சீரும் உரிச்சீரும், வேறு வேறு வருமாறு:

“தெறுக தெறுக தெறுபகை தெற்றாற்

பெறுக பெறுக பிறப்பு"

இஃது இயற்சீரான் வெண்பா வந்தது.

- யா. வி. 95. மேற்.

“பூம்பாவாய் ! நீயொருநாட் பூம்பொழில்வாய் வந்தாயை யாம்பாவை வேண்டினமோ ஏன்று”

என உரிச்சீரான் வெண்பா வந்தது.

99

(நேரிசை ஆசிரியப்பா)

"மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே

அரும்பிய சுணங்கின் அம்பகட் டிளமுலைப்

பெருந்தோள் நுணுகிய நுசுப்பிற்

கல்கெழு கானவர் நல்குறு மகளே"

து இயற்சீரான் ஆசிரியம் வந்தது.

1. ‘நீ' என்பவை.

2. கை, மை, மெய், நெய் என்பன.

3.

குர, சர, அர, பிரி என்பன.

(பா. வே) *வான்செய் நாண். *சேர்ந்ததேன்.

- குறுந்தொகை. 71.