உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

குன்றாமென அன்றாமெனக்

குமுறா நின்றன கொடுந்தொழில் வேழம்; வென்றார்ந் தமைந்த விளங்கொளி இளம்பிறைத் துளங்குவாள் இலங்கெயிற் றுழலுளைப் பரூஉத்தாள் அதிரும் வானென எதிரும் கூற்றெனச்

சுழலா நின்றன சுழிகண் யாளி;

சென்றார்ந் தமைந்த சிறுநுதி வள்ளுகிர்ப் பொறியெருத் தெறுழ்வலிப் புலவுநா றழல்வாய்ப் புனலாமெனக் கனலாமெனப்

புகையா நின்றன புலிமான் ஏற்றை; 1என்றாங்கிவை யிவையியங்கலின் எந்திறத்தினி வரல்வேண்டலம் தனிவரலெனத் தலைவிலக்கலின்

இறுவரைமிசை எறிகுறும்பிடை

107

இதுவென்னென அதுநோனார்

கரவர விடைக்கள உளமது கற்றோர் ஓதும் கற்பன்றே”

- யா. வி. 25. 6. மேற்

_

யா. கா. 29. மேற்.

என்னும் 2ஆசிரியத்துறையுள் வஞ்சியுரிச்சீர் வந்தன. என்னை?

1. இவ்வடி பல்வேறு பதிப்புக்களிலும் (யா. வி; யா. கா) வெவ்வேறு வகையில் இருபது சீருடையதாகக் காணப்பெறுகிறது. இதில் பதினாறு சீரே இருத்தல் வேண்டும்.

2. "இது நான்கடியாய் முதலடியும் மூன்றாமடியும் பதினான்கு சீராய் அல்லாத அடியிரண்டும் பதினாறு சீராய் இடை இடை குறைந்து வந்த ஆசிரியத்துறை யா. கா. 29. இதே இலக்கணம் பெற்ற ஆசிரியத் துறைக்கு.

(எ.டு) உண்டாங் கெனினு மிலதென் றறிஞர்கள்

பொய்யெனப் புகலவும் மெய்யெனப் பெயர்பெற்

றுன்னாமுன மின்னாமென வுளதாய்

மாய்வது நிலையில் யாக்கை

கண்டாங் கிகழுங் கிழமுதி ரமையத்

தைவளி பித்தென மெய்தரும் வித்திற்

கடலிற் றிரையென வுடலிற் றிரையொடு

கலியா நின்றன நலிவு செய் நோய்கள்

புண்டாங் கயின்முக் குடுமிப் படையொடு

மெயிறலைத் தழல்விழித் துயிருணக் கனல்சேர்

பகையாமென நிழலாமெனத் திரியா நின்றது கொலைசெய் கூற்றம்

விண்டாங் ககலுபு மெய்ப்பொரு டுணிவோர்

மின்பொலி பொன்புனை மன்றிலெம் முயிராம்

விமலன் குஞ்சித கமலங் கும்பிட

வேண்டுவர் வேண்டார் விண்மிசை யுலகே.

-சிதம்பரச் செய்யுட் கோவை.