உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

தெழுத்தின்காறும் உயர்ந்த மூன்றடியும் சிந்தடி ; பத்தெழுத்து முதல் பதினான்கெழுத்தின்காறும் உயர்ந்த ஐந்தடியும் அளவடி, நேரடி; பதினைந்தெழுத்து முதலாகப் பதினே எழழுத்தின்காறும் உயர்ந்த மூன்றடியும் நெடிலடி; பதினெட்டெழுத்து முதலாக இருபதெழுத்தின்காறும் உயர்ந்த மூன்றடியும் கழிநெடிலடி ; இருபதெழுத்தின் மிக்க நாற்சீரடிப்பா இல்லை; என்று இவ்வாறு அடி வகுத்துப் பின்னைக் ‘குறளடி முதலாகிய ஐந்தடியும் ஆசிரியப்பாவிற்கு உரிய; சிந்தடியும் அளவடியும், நெடிலடியின் முதற்கண் இரண்டடியும், வெண்பாவிற்கு உரிய; அளவடியுள் கடைக்கண் இரண்டடியும், நெடிலடியும், கழிநெடிலடியும் இலக்கணக் கலிப்பாவிற்கு உரிய; அல்லதூஉம், நான்கெழுத்து முதலாகப் பன்னிரண்டெழுத்தின்காறும் இருசீரடி வஞ்சிப்பா விற்கு உரிய ; முச்சீரடி வஞ்சிப்பாவிற்கு எழுத்து வரையறை இல்லையாயினும், எட்டெழுத்து முதலாக நெடிலடிக்கு ஓதிய எழுத்தளவும் வரப்பெறும்,' என்றும்; பின்னை, ' வெண்பா, ஆசிரியம், கலியுள் வரும் சீர் ஐந்தெழுத்தின் மிகா; வஞ்சிப்பாவின் சீர் ஆறெழுத்தின் மிகா; சிறுமை, மூன்றெழுத்தாவது சிறப்புடைத்து ; இரண்டெழுத்தினாலும் அருகி வரப்பெறும், என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது, இது சார்புநூல் ஆகலின். என்னை?

66

நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே' என்று, பின்னை,

1“நாலெழுத் தாதி ஆறெழுத் தெல்லை ஏறிய நிலத்த குறளடி என்ப்

99

99

“ஏழெழுத் தென்ப சிந்தடிக் களவே; ஈரெழுத் தேற்றம் இல்வழி யான “பத்தெழுத் தென்ப நெடிலடிக் களவே; ஒத்த நாலெழுத் தொற்றலங் கடையே’ “மூவைந் தெழுத்து நெடிலடிக் களவே" ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப” “மூவா றெழுத்துக் கழிநெடிற் களவே;

ஈரெழுத்து மிகுதலும் இவட்பெறும் என்ப”

66

- தொல். பொருள். 344

“தன்சீர் எழுத்தின் சின்மை மூன்றே" - தொல். பொருள். 348-352;358 என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார் ஆகலின்.

1. குறளடி முதலாகக் கழிநெடிலடி ஈறா எழுத்து வகையால் அடியெண்ணுமாற்றை 95 ஆம் நூற்பாவின்கண் வரும் “போந்து போந்து சார்ந்து சார்ந்து" என்னும் மேற்கோட் பாடலில்

காண்க.