உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

137

இவற்றுக்கு எழுத்து எண்ணுகின்றுழிக் குற்றியலிகரமும், குற்றியலுகரமும், ஆய்தமும், ஒற்றும் இவை ஒழித்து எண்ணப் படும் எனக் கொள்க.

(நேரிசை வெண்பா)

“ஈரிரண்டும் ஓரேழும் ஈரைந்தும் மூவைந்தும் *பாரியன்ற நாற்சீர் பதினெட்டும் - ஓரா விளையும் பதினேழ் நிலத்துக் குறள்சிந் தளவு நெடில்' கழிலோ டைந்து”

66

"ஐந்தும் அகவற்கு வெள்ளைக் களவடியும் சிந்து நெடிலடிக்கண் தொல்லிரண்டும் - வந்த தளவிரண்டும் ஆன்ற நெடில்கழியும் *ஒண்பாற் றளைசிதைவில் தண்டாக் கலிக்கு’

“ஈரிரண்டோ டீரா றெழுவாய் இறுவாயாச் சேரும் எழுத்திருசீர் வஞ்சிக்காம் - ஓரும் நெடிலடிக்கு நேர்ந்தனவும் மூவொருசீர் வஞ்சிக் கடிவகுத்தார் எட்டாதி ஆய்ந்து”

“அளவியற்பா* ஆன்றசீர் ஐந்தெழுத்திற் பல்கா; வளவஞ்சிக் காறுமாம் மாதோ ; வளவஞ்சிச் சின்மையொரு மூன்றாகும் என்பர் சிறப்புடைமைத் தன்மை* தெரிந்துணர்வோர் தாம்”

“குற்றிகரம் குற்றுகரம் என்றிரண்டும் ஆய்தமும் ஒற்றும் எனவொரு நான்கொழித்துக் - கற்றோர் உயிரும் உயிர்மெய்யும் ஓதினார் எண்ணச் செயிரகன்ற செய்யுள் அடிக்கு” இவற்றை விரித்து உரைத்துக் கொள்க.

ரு

- யா.வி. 95. மேற்

- யா.வி. 95.மேற்

- யா. வி. 95. மேற்

யா.வி. 36. மேற்

அல்லதூஉம் இயற்சீரான வந்ததனை ‘இயலடி' என்றும்; உரிச்சீரான் வந்ததனை ‘உரியடி' என்றும்; இரு சீரும் விரவியும், பொதுச்சீர் விரவியும், பொதுச்சீரானே வந்தும் நிகழ்வனவற்றை எல்லாம் ‘பொதுவடி' என்றும் வழங்குப என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது. ஐந்தடியினையும் இம் மூன்றானே உறழப் பதினைந்தடியாம்; பிறவற்றாற் கூறப் பலவுமாம்.

1. கழில் - கழிநெடிலடி.

(பா. வே) *ஏழெழுத்தும். *பாரியைந்த. *தன்பாற். *என்றசீர். *தெரிந்துணர்ந்தோர்.