உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(கட்டளைக் கலித்துறை)

"குறளிரு சீரடி ; சிந்துமுச் சீரடி; நாலொருசீர்

அறைதரு காலை அளவொடு நேரடி : ஐயொருசீர்

நிறைதரு பாதம் நெடிலடி யாம் ; நெடு மென்பணைத்தோட் கறைகெழு வேற்கணல் லாய் ! மிக்க பாதம் கழிநெடிலே

“திரைத்த இருது குறள்சிந்து ; அளவடி தேம்பழுத்து;

விரிக்கும் நெடிலடி வேல்நெடுங் கண்ணி ! வென்றான் வினையின் இரைக்கும் கணிகொண்ட மூவடி வோடிடங் கொங்குமற்றும் கரிக்கைக் கவான்மருப் பேர்முலை மாதர் ! கழிநெடிலே

இவற்றை விரித்து உரைத்துக்கொள்க.

வஞ்சிப்பாவிற்குரிய அடிகள்

உக. சிந்தடி குறளடி என்றிரண் டடியான்

வஞ்சி நடக்கும் என்மனார் புலவர்.

யா. கா. 12. 13. (ஙு)

என்பது சூத்திரம். மேற்கூறப்பட்ட அடியினை எல்லாப் பாவிற் கும் பாவினத்திற்கும் பகுத்து உணர்த்துவான் எடுத்துக் கொண்டார். அவற்றுள், இச்சூத்திரம் வஞ்சிப்பாவிற்கு உரிய அடி உணர்த்துதல் நுதலிற்று.

(இ.ள்) சிந்தடியும் குறளடியும் என்ற இவ்விரண்டடி யானும் வஞ்சிப்பா நடக்கும் என்ப புலவர் என்றவாறு.

'என்மனார் புலவர்' என்பது, ‘என்ப புலவர்' என்பதனைச் சொல்லுமோ? எனின் சொல்லும். என்னை? 'என்ப' என்பது நிலைமொழியாய், ‘புலவர்’ என்பது வருமொழியாய், ‘மன், ஆர்’ என்பன இரண்டு இடைச்சொல் வந்து, நிலைமொழி, ஈற்றின்கட் பகரம் கெட்டு, “என்மனார் புலவர்' என்று முடிந்தது ஆகலின். குறளடி, சிந்தடி' என்னாது, 'சிந்தடி, குறளடி' என்று முறை சொன்னமையால், குறளடி வஞ்சிப்பாச் சிறப்

பிறழச் புடைத்து,” எனக் கொள்க.

1.

‘என்மனார்' என்பது செய்யுள் முடிபெய்தி நின்றதோர் ஆர் ஈற்று எதிர்கால முற்றுச் சொல். என்றிசினோர் கண்டிசினோர் என்பன முதலாயின அவ்வாறு வந்த இறந்தகால முற்றுச் சொல். 'என்ப' என்னும் முற்றுச் சொல்லினது பகரம் குறைந்து மன்னும் ஆரும் என இரண்டு இடைச் சொல் பெய்து விரித்தார் என்று உரையாசிரியர் கூறினாரால் எனின், ‘என்மனார்' என்பது இடர்ப்பட்டுழிச் சிறுபான்மை வாராது நூலுள்ளும் சான்றோர் செய்யுளுள்ளும் பயின்று வருதலானும் இசைநிறை என்பது மறுத்றுப் பொருள் கூறுகின்றார் பின்னும் இசைநிறை என்றல் மேற்கோள் மலைவாகலானும் அவர்க்கது கருத்தன்றென்க. மாணாக்கர்க்கு உணர்வு பெருகல் வேண்டி வெளிப்படக் கூறாது உய்த்துணர வைத்தல் அவர்க்கு இயல்பாகலான் செய்யுள் முடிபென்று கூறாராயினார்" - தொல். சொல் 1. சேனா.