உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

147

எனப் பதினொரு சீர்க் 'கடையாகு கழிநெடிலடியான் பாவினம் வந்தவாறு. பிறவும் கடையாகு கழிநெடிலடியாற் பாவினம் வந்தன, சங்க யாப்பிற் கண்டுகொள்க.

6

ஆசிரியப்பாவில் பிற பாவடிகள் மயங்குதல்

உகூ. இயற்சீர் வெள்ளடி வஞ்சி அடியிவை

அகப்பட வரூஉம் அகவலும் உளவே.

து

(FTT)

என்பது சூத்திரம். 'இஃது என் நுதலிற்றோ?' எனின், அடி மயக்கம் ஆமாறு உணர்த்துவான் எடுத்துக்கோடலின், இச் சூத்திரம் ஆசிரியப்பாவினுள் அல்லாப் பாவின் அடி மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ.ள்) ஈரசைச் சீராலாகிய வெண்பா அடியும் வஞ்சி அடியும் என இவற்றைத் தமக்கு அடியாகக் கொண்டு நடக்கும் ஒருசார் ஆசிரியப்பாக்களும் உள என்றவாறு.

அகப்படுத்துதல்' என்பது, 'தமக்கு ஆகச் செய்தல் பொருள் அகப்படுத்தார்'

என்றவாறு:

கொள்க.

என்றாற்போலக்

பிறரும் இவ்வாறு மயக்கம் சொன்னார். என்னை?

“இயற்சீர் வெள்ளடி ஆசிரிய மருங்கின் நிலைக்குரி மரபின் நிற்கவும் பெறுமே'

என்றார் தொல்காப்பியனார். “வஞ்சி விரவல் ஆசிரியம் உரித்தே; வெண்பா விரவினும் கலிவரை வின்றே

என்றார் பல்காயனார்.

அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

“எறும்பி அளையிற் குறும்பல் சுனைய *உலைக்கல் அன்ன பாறை ஏறிக்

- தொல். செய்.62

யா. கா. 39. மேற்

கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்

கவலைத் தென்பவவர் சென்ற வாறே; அதுமற் றவலம் கொள்ளாது

  • நொதுமற் *கழறுமிவ் வழங்க லூரே”

குறுந். 12

எனவும்,

1. “பதின்சீரின் மிக்குவருவன எல்லாம் கடையாகு கழிநெடிலடி எனப்படும்.” (யா. கா. 35)

(பா. வே) உலைக்கனல்' *நொதுமலர்க். *கலுழுமிவ்.