உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

கலிப்பாவில் பிற பா விரவுமாறு

30. வெள்ளடி கலியினுள் விரவவும் பெறுமே.

151

இஃது என் நுதலிற்றோ?" எனின், கலிப்பாவினுள் பிற பா விரவுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ.ள்) வெண்பா அடி ஒருசார்க் கொச்சகக் கலிப்பா வினுள் மயங்கவும் பெறும் என்றவாறு.

"வெள்ளடி கலியினுள் விரவவும் பெறும்' என்ற உம்மை யால்,” ஆசிரிய அடியும் வந்து மயங்கப்பெறும் எனக் கொள்க. “காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்'

கலித்தொகை 30 யா. வி. 86. மேற்

என்னும் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவினுள்ளும்,

“நறுவேங்கைத் துறுமலர் நன்னுதலார் கொண்டணிய'

- யா. வி. 86. மேற்.

என்னும் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவினுள்ளும் வெண்பா வும் ஆசிரியமும் மயங்கி வந்தன. அவை போக்கி, மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாக் காட்டும்வழிக் காட்டுதும். என்னை?

“வஞ்சி விரவல் ஆசிரியம் உரித்தே

வெண்பா விரவினும் கலிவரை வின்றே”

என்றார் *பல்காயனார்;

“பொதுவகையாற் சொற்றனவும் பொய்தீர் சிறப்பிற்

குதவி ஒரோவிடத்து நிற்கும் - விதிவகையால் நின்ற பொருளை நிகழ்விப் பதுநியமம் என்றுரைப்பர் தொல்லோர் எடுத்து”

என்றார் நற்றத்தனார் எனக் கொள்க.

வஞ்சிப்பாவில் பிற பா மயங்குமாறு

- யா. கா. 39. மேற்.

31. வஞ்சியுள் அகவல் மயங்கினும் வரையார்.

(அ)

'என்பது என் நுதலிற்றோ?' எனின், வஞ்சிப்பாவினுள் பிற பா மயக்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ.ள்) வஞ்சிப்பாவினுள் ஆசிரிய அடி விரவவும் பெறும் என்றவாறு.

அகவல் மயங்கினும் வரையார்,' என்ற உம்மையால், கலியடியும் ஒருசார் வெள்ளடியும் மயங்கி வரவும் பெறும்;

(பா. வே) *சாரல்.