உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

கூ

வரையறை இல்லை; என்பார், 'விளங்கக் கூறல்' என்னும் நூல் மாண்பு கடைப்பிடித்து மயங்காமை கூறினார். அடிவரை யறுத்து ஓதினார். 'சிறப்புடைப் பொருளை எடுத்துக் கூறல்' என்னும் தந்திர உத்தி பற்றிச் சிறப்புடைமையால் எடுத்தோதி, மிக்கனவும் உடன்பட்டமை உய்த்துணர வைத்தார்;

“மிக்கடி வருவது செய்யுட் குரித்தே”

(சங்கயாப்பு)

என்ப ஆகலானும், 'வாயுறை வாழ்த்து முதலா உடைய வரைவில என்றார் ஆகலானும் எனக் கொள்க.

அவர் கூறுமாறு:

  • “படைப்போர் குறிப்பினை *நீக்கிப் பெருமை வரைத்தித் துணையென வைத்துரை இல்லென் றுரைத்தனர் மாதோ உணர்ந்திசி னோரே’ என்றார் காக்கைபாடினியார்.

66

ஒன்றும் இரண்டும் மூன்றும் நான்கும் என்றிம் முறையே பாவின் சிறுமை; *தத்தங் குறிப்பின தொடையின் பெருமை’ என்றார் அவிநயனார்.

66

"ஆசிரியப் பாவின் சிறுமைக் கெல்லை மூவடி யாகும்; பெருமை ஆயிரம்; ஈரடி முதலா ஒன்று தலைச்சிறந் தேழடி காறும் வெண்பாட் டுரிய; வாயுறை வாழ்த்தே செவியறி வுறூஉவே *கைக்கிளை அங்கதம் கலியியற் பாட்டே தத்தம் குறிப்பின அளவென மொழிப

என்றார் நற்றத்தனார்.

66

"ஆசிரியப் பாவின் அளவிற் கெல்லை ஆயிர மாகும் ; இழிபுமூன் றடியே’” "ஆசிரிய நடைத்தே வஞ்சி என்ப

66

99

"நெடுவெண் பாட்டே முந்நான் கடித்தே; குறுவெண் பாட்டுக் களவெழு சீரே

அங்கதப் பாட்டவற் றளவோ டொக்கும்'

“கலிவெண் பாட்டே கைக்கிளைச் செய்யுள் செவியறி வாயுறை புறநிலை எனவிவை தொகைநிலை வகையான் அளவில என்ப”

தொல். செய். 157 - தொல். செய். 107

தொல். செய். 158

தொல். செய். 159

- தொல். செய். 160

(பா. வே) *உரைப்போர். *அன்றி. *தங்குறிப் பினவே. *கைக்கிளை மயக்கம் கலிவெண் பாட்டே.