உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

அவ்வியல் பின்றி மண்டில மாகியும்

மூவடி முதலா முறைசிறந் தேறித்

'தொள்ளா யிரத்துத் தொண்ணூற் றெண்ணிரண்

டெய்தும் என்ப இயல்புணர்ந் தோரே’

“வஞ்சி தானே அடிவரம் பின்றி

எஞ்சா இசைநிலை தூங்கல் எய்தி ஆசிரிய மாகி முடியும் என்ப”

99

"செப்பல் ஓசையிற் சீர்தளை சிதையாது மெய்ப்படக் கிளந்த வெண்பா விரிப்பிற் குறள்நேர் நெடிலென மூன்றாய் அவற்றின் இறுதி அடியே முச்சீர்த் தாகி அதனீற் றசைச்சீர் எய்தி அடிவகை ஓரிரண்டு முதலா முறைசிறந் தீரா

றேறும் என்ப இயல்புணர்ந் தோரே”

என்றார் பரிமாணனார்.

(கட்டளைக் கலித்துறை)

“வெள்ளைக் கிரண்டடி வஞ்சிகு மூன்றடி மூன்றகவற் கெள்ளப் படாக்கலிக் கீரிரண் டாகும் இழிபுரைப்போர் உள்ளக் கருத்தின் அளவே பெருமையொண் போதலைத்த கள்ளக் கருநெடுங் கட்சுரி மென்குழற் காரிகையே”

அறத்தா றிதுவென வெள்ளைக் கிழிபக வற்கிழிபு

குறித்தாங் குறைப்பின் முதுக்குறைந்தாம்; குறையாக்கலியின் திறத்தா றிதுசெல்வப் போர்ச்செங்கண் மேதிவஞ் சிச்சிறுமை

புறத்தாழ் கருமென் குழற்றிரு வேயன்ன பூங்கொடியே” யா. கா. 14.15 என்னும் யாப்பருங்கலப் புறநடைகளைப் பதம் நெகிழ்த்து

உரைத்துக் கொள்க.

1.

2.

“எழுத்தினால் ஆகும் அசை; அசையாற் சீராம்; 2இழுக்கிகந்த சீராற் றளையென் - றொழுக்கினார் சீரால் அடி; அடியாற் செய்யுளாம் என்றிடையிட் டோராதே ஓதுவதோ ஒத்து?”

900+90+8+2=ஆயிரம் என்றது ஆசிரியத்தின் அடிப்பெருமை.

குற்றமற்ற.