உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

  • பொருதுசினம் தணிந்த பூநுதல் 'ஒருத்தல் போகாது வழங்கும் ஆரிருள் நடுநாள் 2பௌவத் தன்ன பாயிருள் நீந்தி யிப்பொழுது வருகுவை யாயின்

நற்றார் மார்ப ! தீண்டலெம் ’கதுப்பே”

169

யா. கா. 41. மேற்.

இது பகரமெய் வருக்க மோனை. இவ்வகை வருவன முதலெழுத்து ஒன்றாவிடினும், தமது வருக்க ஒப்புமை நோக்கி மோனைப்பாற்படுத்து, வருக்க மோனை என்று வழங்கப்படும்

என்றவாறு.

466

(இன்னிசை வெண்பா)

'நீடிணர்க் கொம்பர்க் 'குயிலாலத் தாதூதிப் பாடுவண் டஞ்சி அகலும் பருவத்துத்

7.

தோடார் °தொடிநெகிழ்த்தார் உள்ளார் *படரொல்லா 8பாடமை சேக்கையுட் கண்'

இது ப

وو

யா. கா. 41. மேற்

து டகரமெய் வருக்க எதுகை. இவ்வாற்றல் வருவன இரண்டாம் எழுத்து ஒன்றி வராவிடினும், இரண்டாம் எழுத்தின் வருக்க ஒப்புமை நோக்கி எதுகைப்பாற்படுத்து, வருக்க எதுகை என்று வழங்கப்படும்.

நெடில் மோனை வருமாறு:

66

(குறட்செந்துறை)

ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன் றொழுக்கம் உடைமை

- முதுமொழிக்காஞ்சி 1

இது முதலெழுத்து ஒன்றாமையின், மோனையும் அன்று ; இரண்டாம் எழுத்து ஒன்றுதலும், இரண்டாம் எழுத்தின்மேல் ஏறிய உயிர் ஒன்றுதலும், மூன்றாம் எழுத்து ஒன்றுதலும் இன்மையால்; எதுகையும் அன்று சொல்லும் பொருளும் பகைத்து வாராமையின், முரணும் அன்று; இறுவாய் ஒத்து வாராமையின், இயைபும் அன்று; அளபெடுத்து ஒன்றி வாராமையின், அளபெடையும் அன்று; ஒவ்வாமைத் தொடுத்ததின்மையால், செந்தொடையும் அன்று; அடி அடி முழுதும் ஒரு சொல்லே வரத் தொடுத்த ன்மையான், இரட்டைத்தொடையும் அன்று; ஈறு முதலாகத் தொடுத்ததின்மையின், அந்தாதித்தொடையும் அன்று; தனை நெட்டெழுத்து என்னும் மாத்திரையே ஒப்புமை 1. யானை. 2. கடல். 3. கூந்தல். 4. நிறைந்த பூங்கொத்து. 5. குயில்பாட. 6. வளைகழலுமாறு மெலிவித்தோர். 7. நினையார். 8. வேலைப்பாடமைந்த படுக்கை. (பா. வே) *பொங்குசினம் தணியாப். *படலொல்லா.