உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

நோக்கி, இயைந்து இனிதாய்க் கிடத்தலான், நெடில் மோனை என்று வழங்குப.

166

இனி, நெடில் எதுகை வருமாறு:

(வெளி விருத்தம்)

ஆவா வென்றே அஞ்சினர் ஆழ்ந்தார் - ஒருசாரார்; கூகூ வென்றே 'கூவிளி கொண்டார் - ஒருசாரார்; மாமா வென்றே மாய்ந்தனர் நீத்தார் - ஒருசாரார்;

ஏகீர் ‘நாகீர் ! என்செய்தும் என்றார் - ஒருசாரார்; - யா. கா. 27. 41. மேற்.

இன்னவெல்லாம் இரண்டாம் எழுத்து ஒன்றாவாயினும், இரண்டாம் எழுத்தின் நெடில் ஒப்புமை நோக்கி, இயைந்து இனியவாய்க் கிடத்தலின், நெடில் எதுகைப்பாற்படுத்து, நெடில் எதுகை என்று வழங்கப்படும்.

இன மோனை மூன்று வகைப்படும்: வல்லின மோனையும், மெல்லின மோனையும் இடையின மோனையும் என. அவற்றுள் வல்லின மோனை வருமாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

“கயலேர் உண்கண் கலுழ நாளும்

சுடர்புரை திருநுதல் பசலை பாயத்

திருந்திழை அமைத்தோள் அரும்படர் உழப்பப்

போகல் வாழி ஐய ! பூத்த

4

கொழுங்கொடி *அணிமலர் தயங்கப்

பெருந்தண் *வாடை வரூஉம் பொழுதே

யா. கா. 41. மேற்.

இஃது எல்லா அடியும் முதற்கண்ணே வல்லினமே வந்தமையால், வல்லின மோனை என்று கையனார் காட்டிய பாட்டு. பிறவும் அன்ன.

மெல்லின மோனையும் இடையின மோனையும் வந்துழிக் கண்டு கொள்க.

இன எதுகை மூன்று வகைப்படும் : வல்லின எதுகையும், மெல்லின எதுகையும், இடையின எதுகையும் என.

அவற்றிற்குச் செய்யுள் வருமாறு :

1. இரக்கக் குறிப்பு. 2. கூப்பீடு. 3. இளையீர். 4.விளங்க.

(பா. வே) *அணிமலர். *வாடையொடு வரூஉம்.