உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

அவர் கூறுமாறு :

"சீர்முழு தொன்றிற் றலையா கெதுகை, ஓரெழுத் தொன்றின் இடை ; கடை பிறவே”

என்றார் ஆகலின்.

66

அவை வருமாறு.

(நேரிசை வெண்பா)

'சிலை' விலங்கு நீள்புருவம் சென் றொசிய நோக்கி முலைவிலங்கிற் றென்று 'முனிவாள் - மலை விலங்கு தார்மாலை மார்ப ! தனிமை பொறுக்குமோ கார்மாலை 4கண்கூடும் போழ்து?

இது தலையாகு எதுகை.

66

(குறள் வெண்பா)

அகர முதல எழுத்தெல்லாம் ; ஆதி பகவன் முதற்றே உலகு

இஃது இடையாகு எதுகை.

66

- தண்டியலங்காரம் 16. மேற்.

(நேரிசை வெண்பா)

ஆவின் இடையர் விதையழிப்பர்; 'அவ்விதையைக் காமினோ !' என்றார் 5கதம்படுவர்; - நாமினிப் பொல்லா தெனினுமப் பூந்தோட்ட வாழ்நருங் கொள்ளாரா நஞ்சொற் குணம்”

து கடையாகு எதுகை.

66

மோனைக்கும் இவ்வாறே கொள்க. என்னை? ஒன்றினம் முடித்தல் தன்னினம் முடித்தல் என்றிவ் வகையால் யாவையும் முடியும்’

என்ப ஆகலின்.

யா. வி. 60 மேற்.

- திருக்குறள் 1

வரலாறு :

(குறள் வெண்பா)

“சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு

இது தலையாகு மோனை.

"மாவும் புள்ளும் வதிவயிற் படர

மாநீர் விரிந்த பூவும் கூம்ப

இஃது டை யாகு மோனை.

திருக்குறள் 267

- யா. வி. 35 மேற்.

1. விலங்குதல் - விலக்குதல். 2. வளைய. 3. ஊடுவாள். 4. சேருமிடத்து. 5. சினம்.