உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

1“பகலே பல்பூங் கானற் கிள்ளை ஒப்பியும் பாசிலைக் குளவியொடு கூதளம் விரைஇ

என்பது கடையாகு மோனை.

66

இனி, இரண்டடி எதுகைக்குச் சொல்லுமாறு : “இரண்டடி எதுகை திரண்டொருங் கியைந்தபின் முரண்ட எதுகையும் இரண்டினுள் வரையார்”

என்றார் ஆகலின்.

வரலாறு :

6

366

2

(கலி விருத்தம்)

3“உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமாண் திலக மாய திறலறி வன்னடி

வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவும் தொழுவல் தொல்வினை நீங்குக என்றியான்”

எனவும்,

(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

“மணியுமிழ்ந்து மாமலைமேல் மேய்வனவும் நாகம்: மடவர லார்கொய்ய மலர்வனவும் 'நாகம்; பிணியவிழ்ந்து நன்னாளாற் பூப்பனவும் வேங்கை

I

173

வளையாபதி

6

பிறங்கன்மாத் தொலைத்தவற்றூன் துய்ப்பனவும் வேங்கை;

இறைக்காசாம் நேசமருள் மாலையும் மாலை;

எமக்கினிதா யாமவனைச் சூட்டுவதும் மாலை

நிறைகாய்த்தி நெஞ்சஞ்சச் சுடுவதுவும் காமம் நிலங்காக்கும் 'சேஎய்தன் நெடுநகரும் காமம்”

6

எனவும்,

(கலி விருத்தம்)

6

“மந்திரி கடிதோடி 'மதிபுரை குடையசையத் தந்திர வகைகாணிற் றன்னொடு நிகரில்லாப் பூவிரி கமழ்குஞ்சிச் சாகர மகளொப்பாய் யாவரு மிவணில்லென் றாசற வதுகூறும்"

எனவும் கொள்க.

மோனைக்கும்

இவ்வாறே கூறப்படும், 'ஒன்றினம்

முடித்தல் தன்னினம் முடித்தல்,’ (நன்னூல்14) என்பது தந்திர உத்தியாகலின்.

1.

முழுப்பாடலும் இந்நூற்பாவின் முதற்கண்ணே உள்ளது. 2. விலக்கார். 3. வளையாபதியின் கடவுள் வாழ்த்துச் செய்யுள். இது தொல்காப்பிய இளம்பூரணர் உரைக்கண் கண்டது. 4. சுரபுன்னை. 5. முருகன். 6. கதிர்காமம். 7. மதியம்போன்ற.