உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

'சொல்லினும் பொருளினும் மாறுகோள் முரணே'

என்றார் நற்றத்தனார்.

“பொருளினும் மொழியினும் முரணுதல் முரணே”

என்றார் பல்காயனார்.

“பொருளினும் சொல்லினும் முரணத் தொடுப்பின் முரணென மொழிப முந்தை யோரே’

என்றார் மயேச்சுரர்.

“மறுதலை உரைப்பினும் பகைத்தொடை ஆகும்” என்றார் அவிநயனார்.

“மொழியினும் பொருளினும் முரணத் தொடுப்பின் இரணத்தொடையென் றெய்தும் பெயரே

என்றார் காக்கைபாடினியார்.

ஙுகூ.

முரண் தொடை விகற்பம்

கடையிணை பின்முரண் இடைப்புணர் முரணென

இவையும் கூறுப ஒருசா ரோரே.

யா. கா. 40. மேற்.

யா. கா. 40. மேற்.

(ITT)

என்பது என் நுதலிற்றோ' எனின், முரண் தொடைக்கு ஒருசார் ஆசிரியர் வேண்டும் விகற்பம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ.ள்) கடையிணை முரணும், பின் முரணும், இடைப்புணர் முரணும் என்று சொல்லுவர் ஒருசார் ஆசிரியர் என்றவாறு.

கடையிருசீரும் மறுதலைப்படத் தொடுப்பது, கடையிணை முரண்; கடைச் சீரும் இரண்டாம் சீரும் மறுதலைப்படத் தொடுப்பது பின்முரண்; இடை இரு சீரும் மறுதலைப்படத் தொடுப்பது இடைப்புணர் முரண் எனக் கொள்க.

“கடையிணை பின்முரண் இடைப்புணர் முரண்'

என்றதல்லது, அவற்றிற்கு இலக்கணம் கூறிற்றில்லையாயினும், “சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல்” - நன்னூல் 14 என்பது தந்திர உத்தி ஆகலானும், 'உரையிற்கோடல்' என்ப தாகலானும் இவ்வாறு உரைக்கப்பட்டது எனக் கொள்க.

அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

‘மீன்தேர்ந்து வருந்திய கருங்கால் வெண்குருகு

தேனார் 'ஞாழல் *விரிசினைக் குழூஉம்

1. புலிநகக் கொன்றை, (பா.வே.) *மீன்றேர்ந் தருந்திய. *விரிசினைத் தொகூஉம்.