உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(நேரிசை ஆசிரியப்பா)

"காவியங் கருங்கட் செவ்வாய்ப் பைந்தொடி பூவிரி சுரிமென் கூந்தலும்

வேய்புரை தோளும் அணங்குமால் எம்மே

99

- தமிழ்நெறி விளக்கம் 16. மேற். களவியற்காரிகை 28. மேற்.

யா. கா. 40. மேற். 40.மேற்

இதன் முதலடியில், 'கருங்கட் செவ்வாய்ப் பைந்தொடி’ எனக் கடைச்சீர் மூன்றும் மறுதலைப்படத் தொடுத்தமையாற் கடைக் கூழை முரண் எனக் கொள்க.

“ஒன்றினம் முடித்தல் தன்னினம் முடித்தல்”

என்பது தந்திர உத்தி ஆகலின், ஏனைத் தொடைக்கும் இவ்வாறே கொள்க.

அவை சொல்லுமாறு :

இடை டைப்புணர் யிணை எதுகை,

கூழை எதுகை

கடையிணை மோனை, பின் மோனை, மோனை, கடைக் கூழை மோனை எனவும் ; கடை பின் எதுகை, இடைப்புணர் எதுகை, கடை எனவும்; கடையிணை இயைபு, பின் இயைபு, டைப் புணர் இயைபு, கடைக் கூழை இயைபு எனவும்; கடை கடையிணை அளபெடை, பின் அளபெடை, இடைப்புணர் அளபெடை, கடைக்கூழை அளபெடை எனவும் கண்டு கொள்க.

அவற்றிற்குச் செய்யுள் :

(நேரிசை ஆசிரியப்பா)

பூந்தார்ச் சிறுகிளி புலம்பொடு புலம்ப

(கடையிணை)

மைம்மலர் நெடுங்கண் வாங்கமை நெடுந்தோள்

(பின்)

அந்நுண் கொடியிடை கொடியேற் றுறந்து

(இடைப்புணர்)

சீறடிச் சிலம்பு சிலம்பொடு சிலம்ப

(கடைக்கூழை)

ஏதில் காளையோ டிவ்வழிப்

போதல்கண் டனையோ வாழிய புறவே!”

இதனுள், கடையிணை மோனை முதலாகிய நான்கு விகற்பமும்

முறையானே வந்தவாறு கண்டு கொள்க.

66

(நேரிசை ஆசிரியப்பா)

வஞ்சியங் கொடியின் வணங்கிய நுணங்கிடை மலர்புரை வடிக்கண் வாங்கமைத் தொடித்தோள் மதிபுரை சிறுநுதல் நறுமென் கூந்தல்

(LAGOT)

(கடையிணை)

(இடைப்புணர்)