உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

வான்கதிர் வடமலி தடமுலை மடவரல்

பஞ்சியஞ் சீறடி பனிப்பவிவ்

வெஞ்சுரம் மிதிப்ப விளைந்ததால் விதியே!”

இதனுள், கடை யிணை எதுகை

185

(கடைக்கூழை)

முதலாகிய நான்

கு

விகற்பமும் முறையானே வந்தவாறு கண்டுகொள்க.

(நேரிசை ஆசிரியப்பா)

“புயலும் போலும் பூங்குழற் பிழம்பே ;

(கடையிணை)

தொய்யிலும் பொன்னே ; சாயலும் மயிலே ;

(LIGOT)

சிலையே நுதலும்; முறுவலும் முத்தே;

(இடைப்புணர்)

குயிலும் பாலும் ஆம்பலும் மொழியே;

(கடைக் கூழை)

அரிமதர் நெடுங்கணும் அயிலே ;

வரிவளைத் தோளி முகமுமோர் மதியே”

இதனுள், கடை யிணை இயைபு முதலாகிய நான்கு விகற்பமும் முறையானே வந்தவாறு கண்டுகொள்க. இஃது 'எழுவாய் இறுவாயாகக் கண்டு கொள்க.

(நேரிசை ஆசிரியப்பா)

“மெல்லிணர் நறும்பூ விடர்அள் தொடாஅள்

(கடையிணை)

செய்கையும் வழாஅள் தெய்வமும் தொழாஅள்

(பின்)

இனிதினின் நகாஅள் இராஅள் யாவதும்

(இடைப்புணர்)

விரிமலர் மராஅம் கராஅம் விராஅம்

(கடைக் கூழை)

பின்னிருங் கூந்தல் நன்னுதல்

என்னா குவள்கொல் என்னுமென் நெஞ்சே

இதனுள், கடையிணை அளபெடை முதலாகிய நான்கு விகற்பமும் முறையானே வந்தவாறு கண்டுகொள்க.

இன்னும், 'இவையும் கூறுப ஒருசா ரோரே,' என்ற உம்மை விதப்பினால், அடியடி தோறும் கடைச்சீர்க்கண் முதலெழுத்தும் மொழியும் ஒன்றி வந்தால் கடை மோனை என்றும், இரண்டாம் எழுத்து ஒன்றி வந்தால் கடை எதுகை என்றும், கடை முரணி வந்தால் கடை முரண் என்றும், அடிதொறும் கடைச்சீர் இறுதி எழுத்து ஒன்றி வந்தால் கடை இயைபு என்றும் கடைச்சீர் அளபெடுத்து வந்தால் கடை அளபெடை என்றும் இவ்வாறு பெயரிட்டு வழங்குவாரும் உளர் எனக் கொள்க.

1. முதலிடம் முடிவிடமாக.