உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(குறள் வெண்பா)

“உராஅய தேவர்க் கொழிக்கலு மாமோ

விராஅய 'கோதை விளர்ப்பு?”

து முதல் நின்ற சீரின் நடுநின்ற எழுத்து அளபெடுத்து ஒன்றி வரத்தொடுத்தமையால், இடைநிலை அளபெடைத் தொடை. இனி, ஒற்றளபெடை:

66

(குறள் வெண்பா)

வண்ண்டு வாரும் மலர்நெடூங் கூந்தலாள் பண்ண்டை நீர்மை 2பரிது’

இஃது இடைநிலை ஒற்றளபெடைத் தொடை

(குறள் வெண்பா)

3“உரன்ன் அமைந்த உணர்வினா ராயின் அரண்ண் அவர்திறத் தில்”

து இறுதிநிலை ஒற்றளபெடைத் தொடை

தொடையே' என அதிகாரம் வர வைத்து, பெயர்த்தும் 'அளபெடைத் தொடையே' என்றதனால், முதல் எழுத்து ஒன்றி வந்து அளபெழுந்தால் ‘மோனை அளபெடைத் தொடை’ என்றும், இரண்டாம் எழுத்து ஒன்றி வந்து அளபெழுந்தால் 'எதுகை அளபெடைத் தொடை’ என்றும், முரணாய் வந்து அளபெழுந்தால் 'முரண் அளபெடைத் தொடை என்றும், அவை பலவாய் வந்து அளபெழுந்தால் மயக்கு அயபெடைத் தொடை' என்றும், பிற வாராது அளபெழுந்தால் 'செவ்வள பெடைத் தொடை' என்றும் வழங்கப்படும். அவற்றிற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டு கொள்க.

அஃதே எனின், 'அளபெடை ஒன்றுவது அளபெடைத் தொடை' என்னாது, ‘அளபெடைத் தொடையே' என்று ஏகாரம் மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை? எனின், ' ஒருசார் ஆசிரியரால் இணை முதலாகிய ஒருசார் அளபெடை விகற்பங்கள் சிறுபான்மை ஒன்றாது அளபெடுத்து வரினும், கொள்ளப்படும்,' என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது.

தொடை விகற்பத்து 4நான்கு உயிரளபெடையும், இரண்டு ஒற்றளபெடையும் தம்முள் மயங்கி வரப்பெறும்;

1

கோதைக்கு உண்டாய விளர்நிறம்; காதலற் பிரிவால் நேர்வது. 2. பெரிது. 3. வலிமை ; திறம். 4. தனிநிலை முதனிலை இடைநிலை இறுதிநிலை என நான்கு உயிரள பெடை. குறிற் கீழ் குறிலிணைக் கீழ் என இரண்டு ஒற்றளபெடை.