உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதாரணம் :

யாப்பருங்கலம்

“ஏஎர் ஆஅர் நீஇள் நீஇர்"

என்பது கொள்க.

766

இனி, அவை எட்டு வகையானும் வழங்குமாறு:

(பஃறொடை வெண்பா)

ஆஅ 'அளிய ‘அலவன்றன் பார்ப்பினோ

"டீஇர் இரையுங்கொண் 'டீரளைப் பள்ளியுள் தூஉம் திரையலைப்பத் துஞ்சா துறைவன்றோள் மேஎ வலைப்பட்ட நம்போல் நறுநுதால்!

ஓஓ 'உழக்கும் துயர்!”

193

யா. கா. 18 மேற்.

இஃது அடிதோறும் முதற்சீர்க்கண் அளபெடுத்து ஒன்றி வரத் தாடுத்தமையால், அடி அளபெடைத் தொடை.

(நேரிசை ஆசிரியப்பா)

866

'தாஅட் டாஅ மரைமலர் உழக்கிப்

பூஉக் குவளைப் போஒ தருந்திக்

(இணை) (பொழிப்பு)

காஅய்ச் செந்நெற்’ கறித்துப் போஒய்

(ஒரூஉ)

1°மாஅத் தாஅள்" மோஒட் டெருமை

(கூழை)

தேஎம் புனலிடைச் சோஒர் பாஅல்

(மேற்கதுவாய்)

மீஇன் ஆஅர்ந் துகளும் சீஇர்

(கீழ்க்கதுவாய்)

12ஏஎர் ஆஅர்ந் நீஇள் இர்

(முற்று)

ஊரன் செய்த கேண்மை

ஆய்வளைத் தோளிக் கலரா னாதே"

யா. கா. 20. மேற்.

இதனுள் இணை அளபெடை முதலாகிய ஏழு விகற்பமும்

முறையானே வந்தவாறு கண்டுகொள்க.

அளபெடைக்கு இலக்கணம் பிறரும்

என்னை?

“அளபெடைத் தொடைக்கே அளபெடை யாகும்”

என்றார் பல்காயனார்.

“அளபெடைத் தொடைக்கே அளபெடை ஒன்றும்”

என்றார் நற்றத்தனார்.

“அளபெழின் மாறல தொடுப்பதை அளபெடை”

என்றார் அவிநயனார்.

1.

சொன்னார்.

யா. கா. 16. மேற்

இரக்கக் குறிப்பு. 2. இரங்கத் தக்கது. 3. நண்டு தன் குஞ்சினோடு. 4. நுண்ணிய உணவு. 5. ஈரத்தோடு கூடிய சேற்று வளையுள். 6. விரும்பித் துன்பத்திற்கு ஆடப்பட்ட. 7. இரக்கக் குறிப்பு. 8. தாள் தாமரை. 9. தின்று ; கடித்து. 10. பேரடி 11. பெரிய எருமை 12. அழகமைந்த பெரியநீர்.