உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

“சொல்லிசை அளபெழ நிற்பதை அளபெடை”

என்றார் சிறுகாக்கைபாடினியார்.

66

'அளபெழுந் தியாப்பினஃ தளபெடைத் தொடையே”

என்றார் *உயரும் புரம்நகரச் செற்றவன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர் (மயேச்சுரர்).

66

66

(கட்டளைக் கலித்துறை)

எழுவாய் எழுத்தொன்றின் மோனை ; இறுதி இயைபிரண்டம் வழுவா எழுத்தொன்றின் மாதே! எதுகை ; மறுதலைத்த மொழியான் வரினும் முரண் ; அடி தோறும் முதன்மொழிக்கண் அழியா தளபெடுத் தொன்றுவ தாகும் அளபெடையே

'மாவும்புள் மோனை ; இயைபின் னகை ; வடி யேரெதுகைக் கேவின் முரணும் இருள்பரந் தீண்டள பாஅவளிய

ஓவிலந் தாதி உலகுட னாம்; ஒக்கு மேயிரட்டை;

பாவருஞ் செந்தொடை பூத்தவென் றாகும் பணிமொழியே!”

இவற்றைப் பதம் நெகிழ்த்து உரைத்துக் கொள்க. இணைத் தொடை

சஉ. இருசீர் மிசைவரத் தொடுப்பது இணையே.

யா. கா. 16. 18.

மோனை முதலாகிய ஐந்து தொடையும் உணர்த்தி, அவற்றின் விகற்பமும் உணர்த்துவான் எடுத்துக்கொண்டார்.

அவற்றுள் இச்சூத்திரம் ணை ஆ மாறு உணர்த்துதல்

நுதலிற்று.

(இ.ள்) முதல் இருசீர்க்கண்ணும், மேல் அடிக்கண் வரத்தொடுத்தாற்போல, மோனை முதலாயின வரத்தொடுத் தால், அவை 'இணை மோனை, இணை எதுகை, இணை முரண், இணை இயைபு, இணை அளபெடை' எனப்படும் என்றவாறு. பிறரும்,

“இரண்டாம் சீர்வரின் இணையெனப் படுமே”

என்றார் ஆகலின்.

1.

66

அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

'தண்ணறுந் தகரம் நீவிய கூந்தல்

தாதார் தண்போ 3தட்டுபு முடித்த

மணக்கலவை. 2. தடவிய. 3. இணைத்து. (பா.வே) *உயரும்பர் நகர்ச் செற்றவன்; திரிபுரமெரித்தவர்.