உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

இது முதல் இரு சீர்க்கண்ணும் அளபெடுத்தமையால், இணை அளபெடை.

அஃதே எனின், இ ணை முதலாகிய தொடை விகற் பங்கட்கு இலக்கியம் ஈண்டன்றே காட்டற்பாலது? மேற் காட்டியது என்னை? எனின், ஏழு விகற்பமும் முறையானே ஒரு செய்யுளுள்ளே வந்தது கண்டு கற்பார்க்கு எளிமை நோக்கித் தத்தம் தொடைகளோடும் யையக் காட்டிய தல்லது, இலக்கண முறைமையாவது ஈண்டுக் காட்டுவது எனக் கொள்க. பொழிப்புத் தொடை.

43. முதலொடு மூன்றாஞ் சீர்த்தொடை பொழிப்பே.

“என்பது என் நுதலிற்றோ?” எனின், பொழிப்பு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ.ள்) முதற்சீர்க் கண்ணும் மூன்றாஞ்சீர்க் கண்ணும் ம் மோனை முதலாயின வரத் தொடுத்தால், பொழிப்புத்தொடை எனப்படும் என்றவாறு.

அவை பொழிப்பு மோனை, பொழிப்பு எதுகை, பொழிப்பு முரண், பொழிப்பு இயைபு, பொழிப்பு அளபெடை எனப்படும். “சீரிடை விட்டினி தியாப்பது பொழிப்பாம்”

6 எனவும்,

“ஒருசீர் இடைவிடிற் பொழிப்பொரூஉ இருசீர்" எனவும் பிறரும் சொன்னார் ஆகலின்.

வரலாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

“கணங்கொள் வண்டினம் கவர்வன மொய்ப்பக்

'கழிசேர் அடைகரைக் கதிர்வாய் திறந்த

கண்போல் நெய்தல் கமழும் ஆங்கட்

2கலிமாப் பூண்ட கடுந்தேர்

3கவ்வைசெய் தன்றாற் 'கங்குல் வந்தே

இது முதற்சீர்க் கண்ணும் மூன்றாஞ்சீர்க் கண்ணும் முதலெழுத்து ஒன்றி வந்தமையால், பொழிப்பு மோனை.

(நேரிசை யாசிரியப்பா)

“பல்கால் வந்து மெல்லக் கூறிச்

சொல்லல் வன்மையின் இல்லவை உணர்த்தும்

1. நெய்தல். 2. குதிரை. 3. துன்பம். 4. இரவு. (பா. வே.) *நல்லவை.