உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(இ.ள்) நடு இரு சீர்க்கண்ணும் இன்றி, முதற்சீர்க் கண்ணும் நாலாஞ்சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத்தொடுப்பது ஒரூஉத்தொடை எனப்படும் என்றவாறு.

அவை ஒரூஉ மோனை, ஒரூஉஎதுகை, ஒரூஉமுரண், ஒரூஉ இயைபு ஒரூஉ அளபெடை என வழங்கப்படும்.

“சீரிரண் டிடைவிடத் தொடுப்ப தொரூஉ

என்றாலும் அதிகார வசத்தால் அப்பொருளைப் பயக்கும்; "இருசீர் இடையிடின் ஒரூஉவென மொழிப”

என்றார் தொல்காப்பியனார் ஆகலானும்.

66

'சீரிரண் டிடைவிடின் ஒரூஉவென மொழிப

- தொல். செய். 98.

என்றார் பல்காயனார் ஆகலானும் ; பெயர்த்தும் ‘தொடை’ என்று சொல்ல வேண்டியது என்னை? எனின், தொடை விகற்பம் எல்லாம் நாற்சீர் அடியுள்ளே வழங்கப்படும் என்பது எல்லா ஆசிரியர்க்கும் துணிபென்பது அறிவித்தற்கு ஒரு தோற்றம் உணர்த்தியது எனக் கொள்க.

வரலாறு:

66

(நேரிசை ஆசிரியப்பா)

‘புயல்வீற் றிருந்த 'காமர் புறவிற்

2புல்லார் இனநிரை ஏறொடு புகலப்

புன்கண் மாலை உலகுகண் 3புதைப்பப் புரிவளைப் பணைத்தோட் குறுமகள்

புலம்புகொண் டனளாம் நம்வயிற் புலந்தே

இஃது டை இருசீர்க்கண்ணும் இன்றி, முதற்சீர்க் கண்ணும் கடைச்சீர்க்கண்ணும் முதலெழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், ஒரூஉ மோனை.

(நேரிசை ஆசிரியப்பா)

6

4“பரியல் யாவதும் பைந்தொடி அரிவை! 5பொரியரை மராஅத்து வாலிணர்ச் சுரிமலர் எரியிணர்க் காந்தளோ 'டெல்லுற விரியும் வரிவண் டார்க்கும் நாடன்

பிரியா னாதல் பேணின்மற் றரிதே”

இஃது இடை இரு சீர்க்கண்ணும் இன்றி, முதற்சீர்க் கண்ணும் நான்காஞ்சீர்க்கண்ணும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், ஒரூஉ எதுகை.

1.

அழகிய முல்லை நிலம். 2. புல்லுண்ணும் பசுத்திரன். 3. மூட. 4. வருந்தாதே. 5. பொரிந்தெழுப்பிய அடி. 6. வெண்ணிற அரும்பு. 7. கதிர்வர.