உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

படிய பாவை மாயோள் உண்கண்

கடிய கொடிய தன்மையும் உளவே”

201

து முதல் மூன்று சீர்க்கண்ணும் மறுதலைப்படத் தொடுத் தமையால், கூழை முரண்.

து

(நேரிசை வெண்பா)

“நின்றழல் செந்தீயும் தண்புனலும் இவ்விரண்டும்

மின்கலி வானம் பயந்தாங்கும் - என்றும்

பெருந்தோளி கண்ணும் இலங்கும் எயிறும்

மருந்தும் பிணியும் தரும்

கடைமூன்று சீர்க்கண்ணும் ஈற்றெழுத்து ஒன்றிவரத்

தொடுத்தமையால், கூழை இயைபு.

66

(நிலைமண்டில ஆசிரியப்பா)

விடாஅ விடாஅ வெரீஇப் பெயரும்

தொடாஅத் தொடாஅத் தொடாஅப் பகழியாய்ப் பெறாஅப் பெறாஅப் பெறாஅப் பெயரெனச் செறாஅச் செறாஅச் செறாஅ நிலையே”

இது முதல் மூன்று சீர்க்கண்ணும் அளபெடுத்து ஒன்றி வரத்தொடுத்தமையால், கூழை அளபெடை.

மேற்கதுவாய்த் தொடை

சசு. முதலயற் சீரொழித் தல்லன மூன்றின்

மிசைவரத் தொடுப்பது மேற்கது வாயே.

(கங)

“என்பது என் நுதலிற்றோ?' எனின், மேற்கதுவாய் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ.ள்). இரண்டாம் சீர்க்கண் இன்றி, அல்லாத மூன்று சீர்க் கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுத்தால், அவை மேற்கதுவாய் மோனை, மேற்கதுவாய் எதுகை, மேற்கதுவாய் முரண், மேற்கதுவாய் இயைபு, மேற்கதுவாய் அளபெடை என்று வழங்கப்படும் என்றவாறு.

766

அவை வருமாறு:

(நிலைமண்டில ஆசிரியப்பா)

கணைக்கால் நெய்தல் கண்போல் கடிமலர்க் கருங்கால் ஞாழலொடு கவின்பெறக் கட்டிக்

L

1.

திரண்ட அடி.