உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

203

இஃது

இரண்டாம் சீர்க்கண் இன்றி, ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் ஈற்றெழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், மேற்கதுவாய் இயைபு.

66

(நிலைமண்டில ஆசிரியப்பா)

கூஉம் புடைக்கலம் சுறாஅ* அறாஅ

வறாஅ இடைக்கழி கராஅம் உராஅம் *ஏஎம் எமக்கள மாஅல் ! எனாஅத் தாஅம் சொல்லவும் பெறாஅர் இதோஒ"

இஃது இரண்டாம் சீர்க்கண் இன்றி, ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் அளபெழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், மேற்கதுவாய் அளபெடை.

கீழ்க்கதுவாய்த் தொடை

சஎ. ஈற்றயற் சீரொழித் தெல்லாம் தொடுப்பது

கீழ்க்கது வாயின் கிழமைய தாகும்.

(கச)

'என்பது என் நுதலிற்றோ?" எனின், கீழ்க்கதுவாய் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ.ள்) மூன்றாஞ்சீர்க்கண் இன்றி, முதல இருசீர்க்கண்ணும் கடைச்சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத்தொடுத் தால், அவை கீழ்க்கதுவாய் மோனை, கீழ்க்கதுவாய் எதுகை, கீழ்க்கதுவாய் முரண், கீழ்க்கதுவாய் இயைபு, கீர்க்கதுவாய் அளபெடை எனப்படும் என்றவாறு.

“கீழ்க்கது வாயின் கிழமைய தாகும்,' என்பது, ‘கீழ்க் கதுவாய் என்னும் பெயரினை உரிமையாக உடைத்தாம்,' என்றவாறு.

'முடிவதன் முதலயல் கதுவாய் கீழ்மேல்”

என்றார் பிறரும்,.

1. முதலயற் சீர் (இரண்டாம் சீர்) ஒழித்து அல்லன மூன்றும் இயையத் தொடுப்பது மேற்கதுவாய். ஆயின், எடுத்துக்காட்டாம் பாடலில் மூன்றாம் சீர் ஒழிந்த மூன்று சீர்களுமே இயைந்துள. இயைபு ஈற்றுச் சீரை முதற் சீராகக் கொண்டு எண்ணப்பெறுமாகலின் பிழையின்றாம். எனின் மேலே கீழ்க்கதுவாய்க்குக் காட்டப்பெறும் எடுத்துக் காட்டுப் பொருந்தாததாகி விடுகின்றது. அவ்வெடுத்துக்காட்டைப் பொருந்தியதாகக் கொண்டால் இவ்வெடுத்துக்காட்டுப் பொருந்திற்றில்லையாம். ஆய்க.

(பா. வே) *உறாஅ. *வே௭ மெமக்குள்ள மாஅலே நாஅம்.